தூத்துக்குடி திருவிக நகர் சக்திபீடத்தில் ஆன்மிககுரு பங்காரு அம்மா அவதார பெருமங்கல விழாவை முன்னிட்டு ஏழை மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
தூத்துக்குடி 3வது மைல் அருகே உள்ள திருவிக நகர் சக்திபீடத்தில் ஆன்மிககுரு அருள்திரு பங்காரு அம்மா அவர்களின் 82வது அவதார பெருமங்கல விழா நடைபெற்றது. உலக சமாதனம் வேண்டியும், மழை வளம் வேண்டியும், விவசாயம் செழிக்கவும், மாணவ, மாணவியர்கள் தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்து கல்வி அறிவு சிறக்கவும் வேண்டி கலச விளக்கு வேள்வி பூஜை நடைபெற்றது.
வேள்வி பூஜையை ஆன்மிக இயக்க மாவட்ட தலைவர் சக்திமுருகன் தீபம் ஏற்றி தொடங்கி வைத்தார். தொடர்ந்து ஏழை எளிய மக்களுக்கு சக்திபீட வேள்விக்குழு பத்மாவதி முன்னிலையில் சக்திபீட பொருளாளர் அனிதா நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சியை மத்திய கூட்டுறவு பண்டகசாலை மேலாளர் கந்தசாமி தொடங்கி வைத்தார்.
விழாவில், ஆன்மிக இயக்க துணைத் தலைவர் பண்டார முருகன், பொருளாளர் கண்ணன், மகளிர்அணி பத்மாவதி, வேள்விக்குழு கிருஷ்ணநீலா, பிரச்சாரம் முத்தையா, தணிக்கை வேலு, இளைஞர் அணி செல்லத்துரை, சக்திபீடம் மகளிர்அணி பிரமிளா, வட்டத் தலைவர்கள் பால்சாமி, செல்வம், தினேஷ், சக்திபீட இளைஞர் அணி மணி உட்பட பலர் கலந்து கொண்டன. ஏற்பாடுகளை சக்திபீட துணைத் தலைவர் திருஞானம் செய்திருந்தார்.