தூத்துக்குடியில் பாதாள சாக்கடை திட்ட பணியை மேயர் ஜெகன் பெரியசாமி பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
கடந்த திமுக ஆட்சியின் போது அப்போது முதலமைச்சராக இருந்த கருணாநிதி 2008 ஆகஸ்ட் 5ம் தேதி தூத்துக்குடி நகராட்சியை தமிழகத்தின் 10வது மாநகராட்சியாக தரம் உயர்த்தி தொடங்கி வைத்தார். அப்போது உள்ளாட்சி துறை அமைச்சராக இருந்த மு.க.ஸ்டாலின் மாநகராட்சி பகுதியில் பாதாள சாக்கடை திட்டத்தை அறிமுகம் செய்து மக்களின் குறைகளை தீர்க்கும் வகையில் நிதி ஓதுக்கீடு செய்தார்.
கடந்த 10 ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டிருந்த பாதாள சாக்கடை திட்ட பணிகளை மாநகராட்சி 31வது வார்டுக்குட்பட்ட அண்ணாநகர் 4ம் தெருவிலிருந்து 12ம் தெரு வரை பாதாள சாக்கடை பணிகள் நடைபெறுவதை மேயர் ஜெகன் பெரியசாமி நடந்தே சென்று பணிகளை பார்வையிட்டு அப்பகுதியில் உள்ள பொதுமக்களின் குறைகளையும் கேட்டறிந்தார்.
ஆய்வின் போது அப்பணிகளை மேற்கொள்ளும் நிறுவனங்களுக்கும் ஊழியர்களுக்கும் நல்ல முறையில் பணி செய்து கொடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். கவுன்சிலர் கனகராஜ் உள்பட பலர் உடனிருந்தனர்.