• vilasalnews@gmail.com

கடன்தொல்லைகள் தீர ''சாக்தஸ்ரீ'' சற்குரு சீனிவாச சித்தர் தலைமையில் சிறப்பு மஹா யாக வழிபாடு!

  • Share on

ஸ்ரீசித்தர் பீடத்தில் ராகு-கேது பெயர்ச்சி விழா நடைபெற்றது.

தூத்துக்குடி ஸ்ரீசித்தர் பீடத்தில் ராகு-கேது பெயர்ச்சியை முன்னிட்டு பக்தர்களின் வாழ்வில் கடன்தொல்லைகள் யாவும் முற்றிலுமாக தீரவேண்டி ''சாக்தஸ்ரீ'' சற்குரு சீனிவாச சித்தர் தலைமையில் சிறப்பு மஹா யாக வழிபாடுகள் நடைபெற்றது.

பக்தர்கள் வாழ்வில் நோய்கள் இன்றி நலமாக வாழவேண்டியும், கடன்தொல்லைகள் யாவும் தீரவேண்டியும், தொழில்வளம் பெருகி செல்வம் கொழித்திடவும், கல்வி-செல்வம் பெருகிடவும், விவசாயம் செழித்திடவும் வேண்டி ''சாக்தஸ்ரீ'' சற்குரு சீனிவாச சித்தர் தலைமையில் நவக்கிரகங்களுக்கு சிறப்பு மஹா யாக வழிபாடுகள் வெகு கோலாகலமாக நடைபெற்றது.

யாக வழிபாடுகளை தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இதில், பக்தர்கள், ஆன்மிக அன்பர்கள், மகளிர் வழிபாட்டுக்குழுவினர் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

  • Share on

உலக மகளிர் தின விழா: ஊராட்சி மன்ற தலைவர் சரவணகுமார் பங்கேற்பு!

தூத்துக்குடியில் பாதாள சாக்கடை திட்ட பணியை மேயர் ஜெகன் பெரியசாமி பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்

  • Share on