• vilasalnews@gmail.com

கால்நடைகளுக்கு செயற்கை முறை கருவூட்டல் மருத்துவ முகாம்!

  • Share on

தூத்துக்குடி அருகேயுள்ள செபத்தையாபுரம் கால்நடை மருத்துவமனை சார்பில் மஞ்சள்நீர்காயல் கிராமத்தில் சிறப்பு கால்நடை மருத்துவ முகாம் நடைபெற்றது. 

முகாமிற்கு, தூத்துக்குடி கோட்ட கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குநர் ராஜன் தலைமை வகித்தார். துணை இயக்குநர் ராதாகிருஷ்ணன், உதவி இயக்குநர் ஆண்டனி இக்னேஷியஸ் சுரேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

முகாமில், உதவி மருத்துவர் வேல்மாணிக்கவல்லி தலைமையிலான மருத்துவக்குழுவினர் கால்நடைகளுக்கு குடற்புழு நீக்கம், மலடு நீக்கம், செயற்கைமுறை கருவூட்டல் உள்ளிட்ட சிகிச்சை அளித்தனர். தேர்ந்தெடுக்கப்பட்ட சிறந்த கால்நடை வளர்ப்பாளர்களுக்கு பஞ்சாயத்து தலைவர் விஜயா பரிசு வழங்கினார்.

சிங்கத்தாகுறிச்சியில் பஞ்சாயத்து தலைவர் வேலம்மாள்முருகனும், முத்தாலங்குறிச்சியில் பஞ்சாயத்து தலைவர் லட்சுமணனும், அகரத்தில் பஞ்சாயத்து துணைத்தலைவர் தவசிக்கனியும், பக்கப்பட்டியில் பஞ்சாயத்து தலைவர் விஜயகுமாரும், ஆறாம்பண்ணையில் பஞ்சாயத்து தலைவர் ஷேக்அப்துல்காதரும், மு.கீழப்புத்தனேரியில் பஞ்சாயத்து தலைவர் ஜெயபாரதிசோமுவும், பேரூரணி உமரிக்கோட்டையில் பஞ்சாயத்து தலைவர் முத்துலெட்சுமியும் கால்நடை மருத்துவ முகாம்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட சிறந்த கால்நடை வளர்ப்பாளர்களுக்கு பரிசு வழங்கினர்.

இதில், கால்நடை உதவி மருத்துவர்கள் காசிராஜன், ஆனந்தராஜ், செய்யது இப்ராஹிம், சந்திரா, தெய்வானை மற்றும் மருத்துவ உதவியாளர்கள், விவசாயிகள், கால்நடை வளர்ப்பாளர்கள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

  • Share on

தூத்துக்குடியில் சேவை பெறும் உரிமை சட்டத்தை தமிழ்நாட்டில் அமல்படுத்த வலியுறுத்தி மக்கள் நீதி மய்யம் ஆர்ப்பாட்டம்!

எரிவாயு நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் : நாளை மறுநாள் ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறுகிறது!

  • Share on