• vilasalnews@gmail.com

குறுக்குச்சாலையில் கோவில் வழித் தடத்தை மறித்து தனி நபர் ஆக்கிரமிப்பு - ஆட்சியரிடம் மனு!

  • Share on

கோவில் வழித் தடத்தை மறித்து வழிபாட்டு உரிமைக்கு இடையூரை ஏற்படுத்தும் நபர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.

குறுக்குச்சாலையில் உள்ள கிராம தேவதை ஸ்ரீவீரகாளியம்மன் கோவில்  இடமானது 1 ஏக்கர் 49 செண்டு இடத்தை தேசிய நெடுஞ்சாலைக்கு எடுத்தது போக மீதி இடத்தில் கோவில் கட்டியது போக மீதமுள்ள காலியிடம் கோவில் பராமரிப்பில் இருந்து வந்தது.

இந்தநிலையில், K.சுப்பிரமணிபுரம் ஊரில் உள்ள நடராஜன் என்பவர் கோவிலுக்கு எதிரே கிடந்த காலி இடத்தை அபகரித்து வேலி போட்டு அடைத்து கோவிலுக்கு சாமி கும்பிடுவதற்கு கூட இடம் இல்லாத அளவிற்கு அடைத்துள்ளார். 

ஆகவே, கோவில் வழித் தடத்தை மறித்து வழிபாட்டு உரிமைக்கு இடையூரை ஏற்படுத்தும் நபர் மீது நடவடிக்கை மேற்கொண்டு, கோவிலில் வழிபட பாதையை ஏற்படுத்தி தருமாறு, இந்து முன்னணி மற்றும் குறுக்குச்சாலை கிராம மக்கள் சார்பாக, இந்து முன்னணி மாநில துணைத்தலைவர் வி.பி.ஜெயக்குமார் தலைமையில் தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகம் முன்பு கோஷம் எழுப்பி ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். அதனைத் தொடர்ந்து, இது தொடர்பான மனுவினையும் ஆட்சியரிடம் வழங்கினர்.

  • Share on

தூத்துக்குடி மாவட்ட பத்திரிக்கை மற்றும் தொலைக்காட்சி கூட்டமைப்பின் பொதுக்குழு கூட்டம் - 12 தீர்மானங்கள் நிறைவேற்றம்!

தூத்துக்குடியில் சேவை பெறும் உரிமை சட்டத்தை தமிழ்நாட்டில் அமல்படுத்த வலியுறுத்தி மக்கள் நீதி மய்யம் ஆர்ப்பாட்டம்!

  • Share on