• vilasalnews@gmail.com

தூத்துக்குடி மாவட்ட பத்திரிக்கை மற்றும் தொலைக்காட்சி கூட்டமைப்பின் பொதுக்குழு கூட்டம் - 12 தீர்மானங்கள் நிறைவேற்றம்!

  • Share on

தூத்துக்குடி மாவட்ட பத்திரிக்கை மற்றும் தொலைக்காட்சி கூட்டமைப்பின் 2022 ஆம் ஆண்டின் முதல் பொதுக்குழு கூட்டம், தூத்துக்குடி மாவட்ட நடிகர் சங்க அலுவலக கட்டிடத்தில் வைத்து நடைபெற்றது.

இக்கூட்டத்தில், தூத்துக்குடி  மாவட்ட பத்திரிக்கை மற்றும் தொலைக்காட்சி கூட்டமைப்பின் தலைவர் பிரான்சிஸ் மற்றும் துணைத் தலைவர் ராஜா, செயலாளர் மார்க் மகேஷ், துணைச் செயலாளர் சாம்ராஜ், பொருளாளர் கணேஷ், இணைச் செயலாளர்  அண்ணாதுரை, செயற்குழு உறுப்பினர்கள் மார்கின் ராபர்ட், இம்மானுவேல், குணசிங் மற்றும் சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் பின்வருமாறு :

  1. ஆண்டு முதல் பொது குழுவிற்கு வருகை தந்த நிர்வாகிகள் உறுப்பினர்களுக்கு நன்றி!
  2. தூத்துக்குடி மாவட்டத்தில் பத்திரிக்கையாளர்களை பிரித்து ஆளும் விதமாக செயல்படும் அரசு அதிகாரிகள் செய்தி தொடர்பு துறை அதிகாரியை கண்டிக்கிறோம்.
  3. மாவட்ட ஆட்சியர் அரசு விருது பெற்றதற்கு வாழ்த்து தெரிவிக்கிறோம்.
  4. மாநகராட்சி மேயராக ஜெகன் பெரியசாமி, துணை மேயர் ஜெனிட்டா செல்வராஜ் ஆகியோர்களுக்கு வாழத்து தெரிவிக்கிறோம்.
  5. பத்திரிக்கையாளர்களுக்கு மானிய விலை வீட்டு மனையை காலம் தாழ்த்தாமால் உடனே வழங்க இக்கூட்டம் கேட்டு கொள்கிறது.
  6. சில தினங்களுக்கு முன்பாக உயர் நீதிமன்ற நீதிபதி கிருபாகரன் அறிவித்த பிரஸ்கவுன்சில் அமைப்பை உயர்நீதிமன்றம் திருப்ப பெற்று கொண்ட நீதிமன்ற தீர்ப்பை வரவேற்கிறோம்.
  7. தமிழகத்தில் 38 மாவட்டத்தில் உள்ள பத்திரிக்கையாளர்கள் சிறிய பத்திரிக்கை, பெரிய பத்திரிக்கை என்று பாகுபாடு இல்லாமல் முழுநேர பத்திரிக்கையாளர்களுக்கு அனைத்து சலுகை கிடைக்க  தமிழக செய்தி துறை அமைச்சர் வெள்ளக்கோவில் சாமிநாதன் நடவடிக்கை எடுக்க இக்கூட்டம் கேட்டுக் கொள்கிறது.
  8. மூன்று ஆண்டுகளாக வழங்கப்படாமல் இருக்கும் மாவட்ட ஆட்சியரின் மாவட்ட செய்தியாளர் அடையாள அட்டையை உடனே வழங்க பொதுகுழு கூட்டம் கேட்டுக் கொள்கிறது.
  9. தமிழ்நாடு முதல் அமைச்சர் அனைத்து பத்திரிகையாளர்களுக்கு மருத்துவ காப்பீட்டு திட்டம் இம்மாவட்டத்தில் நடைமுறைப்படுத்தவில்லை. விரைவில் காப்பீட்டு திட்டம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
  10. அனைத்து செய்தியாளர்களுக்கும் தூத்துக்குடி மாவட்டத்தில் சுங்கச்சாவடியில்  (டோல்கேட்) நான்கு சக்கர வாகனத்தில் இலவசமாக செல்ல  மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
  11. தமிழக அரசு பத்திரிகையாளர்கள் நலவாரியத்தை முறையாக அமைத்திட இப்பொதுக்குழு கேட்டுக் கொள்கிறது.
  12. புதிதாக தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளராக பொறுப்பெடுத்துக் கொண்ட முனைவர் திரு எல் பாலாஜி சரவணனை வரவேற்றும் அவரது பணி சிறக்க வாழ்த்துக்களை பொதுக்குழு தெரிவித்துக்கொள்கிற.

உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

  • Share on

சாத்தான்குளத்தில் வியாபாரி வீட்டில் ரூ.1.5 லட்சம் கொள்ளை - மற்றொரு வீட்டில் திருட முயற்சி!

குறுக்குச்சாலையில் கோவில் வழித் தடத்தை மறித்து தனி நபர் ஆக்கிரமிப்பு - ஆட்சியரிடம் மனு!

  • Share on