கயத்தாறு அருகே மர்ம நோய் தாக்கியதில் ஆடுகள் பலியானது.
கயத்தாறு அருகே தெற்கு சுப்பிரமணியபுரம் கிராமத்தைச் சேர்ந்த சுந்தரம் என்பவரின் மகன் ராகுல். இவர் படித்துவிட்டு ஆடுகளை வைத்து தொழில் செய்து தனது குடும்பத்தை காப்பாற்றி வருகிறார். இந்த நிலையில் ராகுல் வளர்த்து வந்த ஆடுகள் மர்ம நோய் தாக்கியதில் பலியானது. தினமும் 2 அல்லது 3 ஆடுகள் என இதுவரை 18 ஆடுகள் செத்தன. இவற்றின் மதிப்பு ரூ.2 லட்சத்துக்கு மேல் இருக்கும் என கூறப்படுகிறது.
எனவே இதில் அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து மீதமுள்ள ஆடுகளை காப்பாற்ற சிகிச்சை அளிக்க வேண்டும் எனவும், நஷ்டஈடு வழங்க வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்