தூத்துக்குடி மாநகராட்சி அலுவலகத்தில் சீர்மிகு நகர திட்டத்திற்கான மாநகர அளவிலான ஆலோசனை மன்ற கூட்டம் நடைபெற்றது.
சீர்மிகு நகர திட்டத்திற்கான மாநகர அளவிலான ஆலோசனை மன்ற கூட்டம் (Smart City Advisory Forum) மக்களவை உறுப்பினர் கனிமொழி கருணாநிதி தலைமையில் இன்று ( 20.03.2022 ) நடைபெற்றது.
இக்கூட்டத்தில், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன், மேயர் ஜெகன், ஆணையர் சாருஸ்ரீ, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன், துணை மேயர் ஜெனிட்டா மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள், பெரு வணிகர் சங்க கூட்டமைப்பு பிரதிநிதிகள் மற்றும் தனியார் தொண்டு நிறுவன பிரதிநிதிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டார்கள்.