தூத்துக்குடி மீளவிட்டான் போஸ்ட் ஆபீஸ் தெருவைச் சேர்ந்தவர் பொன்முனியசாமி மகன் சந்தனராஜ் (39) என்பவர் தனது வீட்டில் ஆடுகள் வளர்த்து வந்துள்ளார். இந்நிலையில் 18.03.2022 அன்று சந்தனராஜ் தனது ஆடுகளை தனது வீட்டின் அருகே மேய்ச்சலுக்கு விட்டபோது அவருடைய ஆடு ஒன்று திருடு போயுள்ளது.
இதனையடுத்து சந்தனராஜ் அளித்த புகாரின் பேரில் சிப்காட் காவல் நிலைய போலீசார் சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் தீவிர விசாரணை மேற்கொண்டதில் தாளமுத்துநகர் ஜேசு நகரைச் சேர்ந்த பெரியசாமி மகன் முனியசாமி (40) மற்றும் தாளமுத்துநகர் சமீர்வியாஸ் நகரைச் சேர்ந்த தட்சணாமூர்த்தி மகன் சஞ்சய் குமார் (29) ஆகிய இருவரும் சேர்ந்து மேற்படி சந்தனராஜின் ஆடை திருடியதும் தெரியவந்தது.
மேலும் அவர்களிடம் நடத்திய விசாரணையில் தூத்துக்குடி சங்கரபேரியைச் சேர்ந்த சின்னத்துரை மனைவி வசந்த மாரி (40) என்பவரது ஆட்டையும் திருடியது விசாரணையில் தெரியவந்தது.
இதுகுறித்து சிப்காட் காவல் நிலைய உதவி ஆய்வாளர் சங்கர் வழக்குப்பதிவு செய்து முனியசாமி மற்றும் சஞ்சய் குமார் ஆகிய இருவரையும் கைது செய்தார், மேலும் அவர்களிடமிருந்து திருடிய ரூபாய் 30,000/- மதிப்பிலான இரண்டு ஆடுகளும் பறிமுதல் செய்யப்பட்டது.