தூத்துக்குடியில் புதிதாக கட்டப்பட்டுள்ள அங்கன்வாடி மைய கட்டிடத்தை கனிமொழி எம்பி திறந்து வைத்தார்.
சீர்மிகு நகர திட்டத்தின் கீழ் புதிதாக மங்களபுரம்,விவிடி பூங்கா,வரதராஜபுரம் மற்றும் திரேஸ்புரம் ஆகிய பகுதிகளில் கட்டப்பட்டுள்ள அங்கன்வாடி மையங்களை தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி 20.03.2022 இன்று திறந்து வைத்தார்.
இந்நிகழ்வில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன், மேயர் ஜெகன், ஆணையர் சாருஸ்ரீ, துணை மேயர் மாநகராட்சி ஜெனிட்டா மற்றும் மாமன்ற உறுப்பினர்கள், அரசு அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டார்கள்.