சைபர் குற்றங்களை விசாரிக்க தனி கோர்ட்டு அமைக்க தேசிய சைபர் பாதுகாப்பு இயக்குனர் வலியுறுத்தல்!
தூத்துக்குடி வ.உ.சி கல்லூரியில் தேசிய சைபர் கிரைம் பயிற்சி மையம் துவக்க விழா நடைபெற்றது.
இவ்விழாவிற்கு, மாவட்ட முதன்மை நீதிபதி சுமதி தலைமை விருந்தினராக கலந்து கொண்டார். வ உ சி சிதம்பரம் கல்வி நிறுவன செயலாளர் ஏபிசிவி சொக்கலிங்கம் தலைமை உரை ஆற்றினார். கல்லூரி முதல்வர் வீரபாகு வரவேற்றார். சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட எஸ்பி பாலாஜி சரவணன் கலந்து கொண்டார்.
டெல்லியில் உள்ள தேசிய சைபர் பாதுகாப்பு நிறுவன இயக்குனர் காளிராஜ் பேசுகையில், நல்ல குருவால் மட்டுமே சிறந்த தலைவர்களை உருவாக்க முடியும். ஆசிரியர்களிடம் பிரம்பால் அடி வாங்கியதால் இன்று உங்கள் முன் நிற்கிறோம். ஆசிரியர்கள் என்பவர்கள் சிற்பிகள் மாணவர்களை செதுக்குபவர்கள். அந்த சிற்பிகளுக்கு தற்போது மாணவர்கள் பயமுறுத்தி கற்றுக் கொடுக்கின்றனர். இது நாட்டுக்கும் நமக்கும் நல்லதல்ல இந்தியாவில் மிகத் திறமையான இளைஞர்கள் உள்ளனர். இவர்களை குறிவைத்து ஆண்ட்ராய்டு செல்போன்களில் ஆப் விளையாட்டு போன்றவற்றை இலவசமாக தருகின்றனர். இதனால் இளைஞர்களின் திறமை பாதிக்கப்படுகிறது. சைபர் கிரைம் குற்றங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த இந்த கல்லூரியில் மையம் துவக்கப்பட்டுள்ளது. சைபர் கிரைம் குற்றங்கள் குறித்து போலீசில் புகார் கொடுத்தால் பயிற்சி பெற்ற போலீசார் இல்லை இதை கருத்தில் கொண்டுதான் மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கிறோம். இவர்கள் முதலுதவி பயிற்சியாளர்கள் போல சைபர்கிரைம் பயிற்சியாளர்கள் உடனடி நடவடிக்கையில் இறங்குவார் சிறுமிகள் ஆபாச படம் குறித்து முதன் முதலில் குரல் எழுப்பினர். அதன்பின் சைபர் கிரைம் தகவல் தொழில்நுட்பவியல் சட்டம் கொண்டுவரப்பட்டது. சைபர் கிரைம் போலீஸ் ஸ்டேஷன்கள் போல சைபர் கிரைம் கூட்டுகள் உருவாக்கப்பட வேண்டும். இதன் மூலம் இவ்வகை குற்றங்கள் தேங்காமல் உடனடி தீர்ப்பு கொடுக்க வாய்ப்பு அதிகம் உள்ளது வளர்ந்து வரும் தகவல் தொடர்பியலில் தகவல் பாதுகாப்பு வல்லுநர்கள் ஏராளமானோர் தேவைப்படுகின்றனர். லட்சக்கணக்கில் சம்பளம் தர நிறுவனங்கள் தயாராக உள்ளன. இதனை மாணவர்கள் பயன்படுத்த வேண்டும். சைபர் குற்றங்களுக்கு என கோர்ட்டுகள் உருவாக்கினால் இவ்வகை குற்றங்களுக்கு உடனே தீர்ப்பு கிடைக்க வாய்ப்பு அதிகரிக்கும் என கூறினார்.
டிஸ்ட்ரிக் ஜட்ஜ் சுமதி மாணவர்களிடம் கூறுகையில், ஆண்ட்ராய்டு மொபைல் பயன்படுத்தும் மாணவ மாணவிகள் அனைவரும் தேவை இல்லாத அதை பதிவிறக்கம் செய்துகொண்டு அதில் தங்கள் ஐடியை கொடுத்து வைத்திருப்பதனால் வெளிநாடுகளில் இருந்து சில குற்றச் செயல்களில் ஈடுபடுவதற்கு நம்மளை பயன்படுத்த பயன்படும் அதனால் மாணவிகள் மாணவர்கள் தேவையில்லாத ஆஃப் அதை பதிவிறக்கம் செய்யாமல் இருப்பது மிகவும் நல்லது என்று கூறினார்.
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சரவணன் பேசுகையில், வாழ்க்கையில் வாழ்க்கை துணையை தேர்ந்தெடுப்பதில் கவனம் தேவை அதிக வருமானம், புகழ், அழகு போன்ற அம்சங்கள் உள்ள பெண்ணை திருமணம் செய்தால் சந்தோஷமான வாழ்க்கை அமையும் என்பது இல்லை உண்மையில் அன்புடன் வாழ்வதே சிறப்பான வாழ்க்கை என்றார்.