• vilasalnews@gmail.com

மாநகர வளர்ச்சிக்கு வர்த்தக தொழில் சங்கம் துணை நிற்க வேண்டும் - மேயர் வேண்டுகோள்

  • Share on

துாத்துக்குடி அகில இந்திய வர்த்தக தொழில் சங்கம் சார்பில் துாத் துக்குடி மாநகராட்சி மேயராக பொறுப்பேற் றுள்ள ஜெகன் பெரிய சாமி, துணை மேயர் ஜெனிட்டா ஆகியோருக்கு பாராட்டு விழா தெற்கு ராஜா தெருவில் உள்ள சங்கத்தில் தலைவர் ஜோ பிரகாஷ் தலை மையில் பொதுச்செய லாளர் சங்கர் மாரிமுத்து முன்னிலையில் நடந்தது.

மேயர் ஜெகன் பெரியசாமியை பாராட்டி அகில இந்திய தொழில் வர்த்தக சங்க நிர்வாகிகள் பேசினர்.நகரின் தொழில் வளர்ச்சிக்கு மாநகராட்சி உறுதுணையாக இருக்க வேண்டும் என்றனர்.

பாராட்டு விழாவில் மேயர் ஜெகன் பெரியசாமி பேசுகையில்

தூத்துக்குடி மாநகராட்சியை தமிழக அளவில் நம்பர் 1 மாநகராட்சியாக உரு வாக்க முயற்சிகள் எடுக்கிறோம். இதற்காக பல்வேறு மேம்பாட்டு பணி களை கனிமொழி எம். பி., அமைச்சர் கீதாஜீவன் ஆலோசனையின் பேரில் செய்ய திட்டங்களை வகுத்து வருகிறோம்.மாநகரின் வளர்ச்சிக்கு அகில இந்திய வர்த்தக தொழில் சங்கம் துணையாக இருக்க வேண்டும் என்றார்.

மாநகராட்சி கவுன்சிலர் ரெங்கசாமி, அகில இந்திய வர்த்தக தொழில் சங்க செயற்குழு உறுப் பினர் சிட்பண்ட் பாலகி ருஷ்ணன் மற்றும் நிர்வாகிகள், பாலசங்கர், பாலு, தி.மு.க., நிர்வாகிகள் பிரபாகரன், ஜேஸ்பர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

  • Share on

ஒரு வருடமாக தலைமறைவு - நீதிமன்றம் பிடிவாரண்ட் நபர் கைது

பனங்காட்டை நீ எப்படி குத்தகைக்கு எடுக்கலாம்... அரிவாளால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தவர் கைது!

  • Share on