• vilasalnews@gmail.com

ஒரு வருடமாக தலைமறைவு - நீதிமன்றம் பிடிவாரண்ட் நபர் கைது

  • Share on

தூத்துக்குடி வடபாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில்  திருட்டுவழக்கில் சம்பந்தப்பட்டு நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்து ஒரு வருடமாக தலைமறைவாக இருந்தவரை போலீசார் இன்று கைது செய்தனர்.

கடந்த 14.12.2017 அன்று வடபாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட திரேஸ்புரம் கடற்கரை பகுதியில் தூத்துக்குடி, திரேஸ்புரம், மேட்டுப்பட்டி பகுதியைச் சேர்ந்த சந்திரன் மகன் தெய்வநாயகம் (48) என்பவரது படகில் உள்ள 40 கிலோ எடையுள்ள இரும்பு நங்கூரத்தை திருடிய வழக்கில் தூத்துக்குடி வடபாகம் காவல் நிலைய போலீசார் தூத்துக்குடி, கிருஷ்ணராஜபுரத்தைச் சேர்ந்த ஜெரோம் மகன் மரிய ஜெகிஷ் (25) என்பவரை கைது செய்தனர். மேற்படி இவ்வழக்கு தூத்துக்குடி குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் IIIல் விசாரணை நடைபெற்று வந்தது.

இந்நிலையில் இவ்வழக்கின் சம்மந்தப்பட்ட மரிய ஜெகிஷ் நீதிமன்ற விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவாக இருந்தார், இதனால் 03.12.2020 அன்று நீதிமன்றம் இவருக்கு பிடியாணை பிறப்பித்து உத்தரவிட்டது. இவரை போலீசார் தேடி வந்த நிலையில் தொடர்ந்து தலைமறைவாக இருந்து வந்தார்.

இதனையடுத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  உத்தரவின்படி, தூத்துக்குடி நகர காவல் துணை கண்காணிப்பாளர் கணேஷ்  மேற்பார்வையில் தூத்துக்குடி வடபாகம் காவல் நிலைய  ஆய்வாளர் ரபி சுஜின் ஜோஸ் தலைமையிலான போலீசார் ஒரு வருடமாக  தலைமறைவாக இருந்து வந்த  மரிய ஜெகிஷ் என்பவரை இன்று கைது செய்தனர்.

  • Share on

மாற்றுத்திறனாளிகளுக்கான சிறு குறுந்தொழில் சுயவேலைவாய்ப்பு வங்கி கடன் மானியம் வழங்கும் திட்ட சிறப்பு முகாம் - ஆட்சியர் தகவல்!

மாநகர வளர்ச்சிக்கு வர்த்தக தொழில் சங்கம் துணை நிற்க வேண்டும் - மேயர் வேண்டுகோள்

  • Share on