மாற்றுத்திறனாளிகளுக்கான சுயவேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம் மற்றும் சிறு குறுந்தொழில் சுயவேலைவாய்ப்பு வங்கி கடன் மானியம் வழங்கும் திட்ட சிறப்பு முகாமில் கலந்துகொண்டு பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சித் தலைவர் செந்தில்ராஜ் தெரிவித்துள்ளார்
2021-2022 ஆம் நிதியாண்டு மாற்றுத்திறனாளிகளுக்கான (UYEGP) வேலையில்லா படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம், (PMEGM) பராத பிரதமரின் சுயவேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம் மற்றும் சிறு குறுந்தொழில் சுயவேலைவாய்ப்பு வங்கி கடன் மான்யம் வழங்கும் திட்டம், ஆவின் திட்டங்களுக்கு சிறப்பு முகாம் வருகின்ற 25.03.2022 அன்று மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகம், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், தூத்துக்குடி என்ற முகவரியில் நடைபெற உள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தை சார்ந்த மாற்றுத் திறனாளிகள் அனைவரும் மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகம் மூலம் வழங்கப்பட்ட மாற்றுத்திறனாளிக்கான தேசிய அடையாள அட்டை நகல், குடும்ப அட்டை நகல், ஆதார் அட்டை நகல், வங்கி கணக்கு புத்தகம் ஆகிய ஆவணங்களுடன் சிறப்பு முகாமில் கலந்துகொண்டு பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சித் தலைவர் செந்தில்ராஜ், தெரிவித்துள்ளார்.