தூத்துக்குடி மாவட்டத்தில் செயல்படும் அனைத்து தனியார் மகளிர் விடுதிகளும் தங்களது விடுதிகளை பதிவு செய்தல் குறித்து மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் தரப்பில் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது :
தூத்துக்குடி மாவட்டத்தில் செயல்படும் அனைத்து தனியார் மகளிர் விடுதிகளும் தங்களது விடுதிகளை பதிவு செய்யும் பொருட்டு தூத்துக்குடி மாவட்ட சமூகநல அலுவலரை தங்களது விடுதி பதிவு குறித்து 20.03.2022-ம் தேதிக்குள் நேரில் அணுகி விவரங்களை தெரிவிக்கும்படி தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.
அணுக வேண்டிய முகவரி :
மாவட்ட சமூகநல அலுவலர்,
மாவட்ட சமூகநல அலுவலகம்,
மாவட்ட ஆட்சியர் வளாகம், கோரம்பள்ளம், தூத்துக்குடி
என இந்த தகவலை மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் தெரிவித்துள்ளதாக, மாவட்ட நிர்வாகம் சார்பில் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.