• vilasalnews@gmail.com

ஒரேநாளில் 3 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது - மாவட்ட காவல்துறை நடவடிக்கை

  • Share on

தூத்துக்குடி மாவட்டத்தில் கஞ்சா விற்பனை மற்றும் போக்ஸோ வழக்குகளில் ஈடுபட்ட  3 பேர் இன்று ஒரேநாளில் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்

கடந்த 28.02.2022 அன்று தூத்துக்குடி வடபாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட வழக்கில் தூத்துக்குடி லூர்தம்மாள்புரம் திருவள்ளுவர் நகரைச் சேர்ந்த ராஜா (எ) நாகூர் ஹனிபா மகன் யாசர் அராபத் (25) மற்றும் தூத்துக்குடி தாளமுத்துநகர், ராஜீவ் காந்தி நகரைச் சேர்ந்த பக்கீர் மைதீன் மகன் அனிபா மரைக்காயர் (23) ஆகியோரை தூத்துக்குடி வடபாகம் காவல் நிலைய போலீசார் கைது செய்து அவர்களிடமிருந்து 1 கிலோ 250 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர். மேற்படி இவ்வழக்கின் சம்மந்தப்பட்ட நபரான யாசர் அராபத் மற்றும் அனிபா மரைக்காயர்  ஆகிய 2 பேர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்க வடபாகம் காவல் நிலைய ஆய்வாளர் ரபி சுஜின் ஜோஸ் அவர்களும்,

கடந்த 19.02.2022 அன்று 8 வயது சிறுமியை பாலியல் வன்புணர்ச்சி செய்த வழக்கில் தூத்துக்குடி மாவட்டம், தருவைகுளம், V.கழுகாசலபுரத்தை சேர்ந்த மரிய மைக்கல் மகன் மணி (56) என்பவரை விளாத்திகுளம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். மேற்படி இவ்வழக்கின் சம்மந்தப்பட்ட நபரான மணி என்பவர் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க விளாத்திகுளம் அனைத்து மகளிர் காவல்நிலைய ஆய்வாளர் விஜயலட்சுமியும் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் அறிக்கை தாக்கல் செய்தனர்.

மேற்படி காவல் ஆய்வாளர்களின் அறிக்கையின் அடிப்படையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  பாலாஜி சரவணன் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்தார்.

அதன் பேரில் மாவட்ட ஆட்சியர் செந்தில் ராஜ், தூத்துக்குடி லூர்தம்மாள்புரம், திருவள்ளுவர் நகரைச் சேர்ந்த ராஜா (எ) நாகூர் ஹனிபா மகன் 1) யாசர் அராபத், தூத்துக்குடி தாளமுத்துநகர், ராஜீவ் காந்தி நகரைச் சேர்ந்த பக்கீர் மைதீன் மகன் 2) அனிபா மரைக்காயர் மற்றும் தூத்துக்குடி மாவட்டம், தருவைகுளம், V.கழுகாசலபுரத்தை சேர்ந்த மரிய மைக்கல் மகன் 3) மணி ஆகியோரை குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார். அவரது உத்தரவின் பேரில் சம்மந்தப்பட்ட காவல் நிலைய ஆய்வாளர்கள் 3 பேரையும் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்து பாளையங்கோட்டை சிறையில் அடைத்தனர்.

  • Share on

ஆறு வயது சிறுமி இரண்டு முறை உலக சாதனைபடைத்து அசத்தல்!

தாளமுத்துநகரில் இரு சக்கர வாகனத்தை திருடிய இளைஞர் கைது - திருடப்பட்ட ₹ 2,10,000 மதிப்புள்ள இரு சக்கர வாகனம் மீட்பு!

  • Share on