• vilasalnews@gmail.com

தூத்துக்குடி மாநகராட்சி பகுதி பொதுமக்களுக்கு மேயர் ஜெகன் பெரியசாமி வேண்டுகோள்!

  • Share on

தூத்துக்குடி மாநகராட்சி பகுதி பொதுமக்களுக்கு மேயர் ஜெகன் பெரியசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தூத்துக்குடி வல்லநாட்டிலிருந்து தூத்துக்குடி மாநகர பகுதி மக்களுக்கு குழாய் மூலம் குடிதண்ணீர் கொண்டு வரும் குழாயில் நான்காம் கேட் பகுதியில் உடைப்பு ஏற்பட்டுள்ளதால் சரி செய்யும் பணி நடைபெற்று கொண்டிருக்கிறது.

இந்த குடிநீர் குழாய் மூலம் குடிதண்ணீர் செல்லும் புதிய பேருந்து நிலையம் கலைஞர் நீர்தேக்க தொட்டி, ஆர்எஸ்பிஆர், ஆதிபராசக்திநகர், விஎம்எஸ்நகர், சுப்பையா பார்க், ரூரல், முருகன் தியேட்டர் அருகில், திரேஸ்புரம், 2ம்கேட் விவிடி பூங்கா, ஆகிய 8 நீர்தேக்க தொட்டிகளுக்கு இந்த குழாய் மூலம் செல்லும் குடிதண்ணீர் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இன்று இரவுக்குள் முழுமையாக பழுது நீக்கப்பட்டு வழக்கம் போல் குடிதண்ணீர் நீர்த்தேக்க தொட்டிகளுக்கு ஏற்றப்பட்டு அப்பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு வழக்கம் போல் குடிதண்ணீர் சப்ளை வழங்கப்படும் என மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

  • Share on

தூத்துக்குடியில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்!

ஆறு வயது சிறுமி இரண்டு முறை உலக சாதனைபடைத்து அசத்தல்!

  • Share on