பங்காரு அம்மா அவதார பெருமங்கல விழாவை முன்னிட்டு பிள்ளையார்நத்தம் கிராமத்தில் விவசாயம் வளம்பெற கலச விளக்கு வேள்வி பூஜை நடைபெற்றது.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே பிள்ளையார்நத்தம் ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றத்தில் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடம் ஆன்மிககுரு அருள்திரு பங்காரு அம்மா அவர்களின் 82வது அவதார பெருமங்கல விழாவை முன்னிட்டு மழைவளம் வேண்டியும், தொழில்வளம் சிறக்கவும், விவசாயம் வளம்பெறவும், மக்கள் நலமுடன் வாழவும் கலச விளக்கு வேள்வி பூஜை நடைபெற்றது. குருபூஜை, வினாயகர் பூஜையுடன் துவங்கிய விழாவில் அறுங்கோண சக்கரம் அமைக்கப்பட்டு முக்கோண வடிவிலான பிரதான யாககுண்டம் அமைக்கப்பட்டு கலச விளக்கு விளக்கு வேள்விபூஜை நடைபெற்றது. வேள்வியை ஆன்மிக இயக்க மாவட்ட தலைவர் சக்தி முருகன் தீபம் ஏற்றி தொடங்கி வைத்தார்.
சக்திகொடியை பிள்ளையார்நத்தம் பஞ்., தலைவர் லிங்கராஜ் முன்னிலையில் குருவிகுளம் ஒன்றிய தலைவர் விஜயலெட்சுமி ஏற்றி வைத்தார்.
ஏழை எளிய மக்களுக்கு இலவச வேஷ்டி சேலைகளை மாவட்ட மகளிர் அணி தலைவி பத்மாவதி வழங்கினார். அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சியை கோவில்பட்டி தொழிலதிபர் கனகசெல்வம் துவக்கி வைத்தார்.
நிகழ்ச்சியில், ஆன்மிக இயக்க மாவட்ட துணைத் தலைவர் பண்டார முருகன், பொருளாளர் கண்னன், வேள்விக்குழு செயலாளர் கிருஷ்ணநீலா, வட்டத் தலைவர்கள் பால்ச்சாமி, அழகர்சாமி, தளவாய்புரம் மன்றம் ராஜ், இளையரசனேந்தல் மன்றம் முருகன், எட்டையபுரம் சிவகாமி, கன்னா, பிள்ளையார்நத்தம் தலைவர் ராமலெட்சுமி, தனலெட்சுமி, ராஜேஸ்வரி உட்பட பலர் கலந்து கொண்டனர்.