தூத்துக்குடியில் நாளை (மார்ச் 12) சனிக்கிழமை மின்தடை ஏற்படும் பகுதிகள் அறிவிக்கப்பட்டு உள்ளன.
இதுகுறித்து நகர்ப்புற மின்சார வாரிய செயற்பொறியாளர் தனலட்சுமி வெளியிட்ட செய்திக்குறிப்பு:
தூத்துக்குடி எட்டயபுரம் ரோட்டில் அமைந்துள்ள நகர துணை மின்நிலையத்தில் இருந்து மின்சாரம் வழங்கப்பெறும் வாட்டர் ஒர்க்ஸ் உயரழுத்த மின் தொடரில் தூத்துக்குடி ஸ்மார்ட் சிட்டி பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது.
இதன் காரணமாக நாளை (மார்ச் 12) (சனிக்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை டூவிபுரம் 1,2,3,4,5-வது தெரு, ஜெயராஜ் ரோடு, மீனாட்சிபுரம், கே.வி.கே. நகர் மற்றும் அதை சுற்றி உள்ள பகுதிகளில் மின்சார வினியோகம் நிறுத்தம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.