தூத்துக்குடி மாநகர பகுதிகளுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்படும் வல்லநாடு தலைமை நீரேற்று நிலையத்தை மேயர் ஜெகன், துணை மேயர் மாநகராட்சி ஜெனிட்டா, ஆணையர் சாருஸ்ரீ ஆகியோர் ஆய்வு செய்தனர்.
தூத்துக்குடி மாநகராட்சி சார்பில் மாநகரில் உள்ள 60 வார்டுகளுக்கும் 3 நாட்களுக்கு ஓருமுறை குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. மேலும் விரைவில் தினசரி குடிநீர் விநியோகம் செய்யும் திட்டம் மாநகராட்சி செயல்படுத்தப்பட உள்ளது.
இதனைத் தொடர்ந்து, தூத்துக்குடி மாநகராட்சி குடிநீர் விநியோக பணிகள் தொடர்பாக வல்லநாடு தலைமை நீரேற்று நிலையத்தினை தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன், துணை மேயர் மாநகராட்சி ஜெனிட்டா, ஆணையர் சாருஸ்ரீ ஆகியோர் ஆய்வு செய்தனர். தூத்துக்குடி மாநகராட்சிக்கு குடிநீர் வரும் வல்லநாடு தாமிரபரணி ஆற்று குடிநீர் கிணறுகள், தலைமை நீரேற்றும் நிலையம் ஆகியவற்றை ஆய்வு செய்தனர்.
மேலும், கோடை காலம் நெருங்கி வருவதால் மாநகராட்சி மக்களுக்கு போதிய அளவிற்கு குடிநீர் வழங்கும் அளவிற்கு தண்ணீர் பம்பிங் செய்யப்படுகிறதா என்பது குறித்து மேயர் ஜெகன் பெரியசாமி அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். ஆய்வின்போது, மாநகராட்சி அதிகாரிகள் உடனிருந்தனர்.