• vilasalnews@gmail.com

தூத்துக்குடியில் 48வது வார்டு பொது மக்கள் மாநகராட்சி அலுவலகத்தில் மனு!

  • Share on

தூத்துக்குடி மாநகராட்சி 48வது வார்டு பொது மக்கள் மாநகராட்சி அலுவலகத்தில் மனு அளித்தனர்.

தூத்துக்குடி மாநகராட்சிகுட்பட்ட பகுதியான 48வது வார்டில் கான் வசதி செய்து தர வேண்டும் என மாநகராட்சி ஆணையர் சாரு ஸ்ரீயுடம்  அப்பகுதி பொது மக்கள் மனு அளித்தனர். 

பின்னர், வெங்கடேஷ் கூறுகையில், தூத்துக்குடி 48வது வார்டு வள்ளிநாயகபுரம் 1,2,3,4 மற்றும் 5வது தெரு, கால்டுவெல் காலனி, SNR நகர் ஆகிய பகுதிகளில் கடந்த நாற்பது வருடத்துக்கு மேலாக சுமார் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.

இப்பகுதியில் மழைக்காலங்களில் மழைநீர் தேங்கி இடுப்பு வரை உள்ளது. மேலும்,  மழைநீர் வீட்டில் உள்ள சமையலறை வரை சென்ற காரணத்தினால் எங்களால் எங்கள் இயல்பு வாழ்க்கையை மேற்கொள்ள முடியவில்லை.

சிறிய குழந்தைகள் முதல் வயது முதிர்ந்த பெரியவர்கள் வரை நோய்வாய்ப்பட்டு பாதிக்கப்படுகின்றனர். ஒவ்வொரு வருடமும் இந்த அவல நிலை தொடர்கிறது. இதனை பல முறை புகார் செய்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும், இந்த முறையும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றால் நாங்கள் அனைவரும் எங்களது ஆதார் மற்றும் வாக்காளர் அடையாள அட்டைகளை திரும்ப தருவதற்கு தயாராக இருக்கிறோம் என கூறினர்.

  • Share on

மாப்பிள்ளையூரணியில் மகளிர் தின விழா!

வல்லநாடு தலைமை நீரேற்று நிலையத்தில் மேயர் ஜெகன் நேரில் ஆய்வு

  • Share on