• vilasalnews@gmail.com

மாப்பிள்ளையூரணியில் மகளிர் தின விழா!

  • Share on

மகளிர் சுய உதவிக்குழு சார்பில் மாப்பிள்ளையூரணியில் தின விழா கொண்டாடப்பட்டது

உலக மகளிர் தினத்தை முன்னிட்டு தூத்துக்குடியை அடுத்த மாப்பிள்ளையூரணியில் மகளிர் சுய உதவிக்குழு சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, தமிழ்நாடு மகளிர் நல மேம்பாட்டு திட்ட அலுவலர் வீரபுத்திரன், தமிழ்நாடு கடலோர வாழ்வாதார கண்காணிப்பு அலுவலர் ரூபன், ஊரக புத்தாக்க திட்ட செயல் அலுவலர் முத்தமிழ் செல்வன், ஆகியோர் தலைமை வகித்தனர்.

ஒருங்கிணைந்த சேவை மைய பதிவாளர் உமாதேவி, இந்தியன் வங்கி மேலாளர் சுதாகர், கார்த்திக்கேயன், இந்தியன் ஓவர்சீஸ் வங்கி முகம்மது சாதீக், ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மகளிர் சுய உதவி குழுக்களுக்கு நடைபெற்ற போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் வசுமதி அம்பாசங்கர், மாப்பிள்ளையூரணி ஊராட்சி மன்ற தலைவர் சரவணக்குமார், ஆகியோர் பரிசு வழங்கி பாராட்டினார்கள்.

விழாவில் மகளிர் குழு இளம் வல்லுநர் புஷ்பராஜ், வட்டார அலுவலர் மகேஸ்வரி, வட்டார திட்ட செயலர் மகேஷ்வரன், டிஎன்ஆர்டிபி ஓருங்கிணைப்பாளர் செந்தில்வேல் ஆறுமுகம், செயல் அலுவலர் ராதா, வட்டார மகளிர் திட்ட இயக்க மேலாளர் முத்துமாரி, ஓருங்கிணைப்பாளர் அமலி, ஒன்றிய கவுன்சிலர் அந்தோணிதனுஷ்பாலன், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் பெலிக்ஸ், பாரதிராஜா, மாவட்ட மாணவரணி துணைச்செயலாளர் மாரிச்செல்வம், மாப்பிள்ளையூரணி கூட்டுறவு கடன்சங்க துணைத் தலைவர் சிவக்குமார், மற்றும் கௌதம், உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மகளிர் குழுக்களின் நாடகம், கோலாட்டம், உள்ளிட்ட பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடைபெற்றன. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மகளிர் சுயஉதவிக்குழு நிர்வாகிகள செய்திருந்தனர்.

  • Share on

மாப்பிள்ளையூரணி குடோனில் ரேஷன் அரிசி பதுக்கல் - ஒருவர் கைது...லாரி உட்பட 5 வாகனங்கள் மற்றும் ரேசன் பொருட்கள் பறிமுதல்!

தூத்துக்குடியில் 48வது வார்டு பொது மக்கள் மாநகராட்சி அலுவலகத்தில் மனு!

  • Share on