• vilasalnews@gmail.com

மாப்பிள்ளையூரணி குடோனில் ரேஷன் அரிசி பதுக்கல் - ஒருவர் கைது...லாரி உட்பட 5 வாகனங்கள் மற்றும் ரேசன் பொருட்கள் பறிமுதல்!

  • Share on

தாளமுத்துநகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் 25 டன் எடையுள்ள ரேஷன் அரிசி மற்றும் கோதுமையை சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த ஒருவரை போலீசார் கைது செய்தனர்.

மாவட்ட காவல்  கண்காணிப்பாளர் அவர்கள் உத்தரவுப்படி தூத்துக்குடி நகர காவல் துணை கண்காணிப்பாளர் கணேஷ்  நேற்று (08.03.2022) தாளமுத்துநகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மாப்பிள்ளையூரணி பகுதியில் உள்ள ஒரு குடோனை சோதனை செய்ததில் அங்கு சட்டவிரோதமாக சுமார் 25 டன் ரேசன் அரிசி மற்றும் கோதுமை இருந்ததும் அவற்றை ஒரு லாரி, 2 மினி சரக்கு வாகனம் மற்றும் 2 கார் ஆகியவற்றில் சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.

உடனடியாக காவல் துணை கண்காணிப்பாளர் கணேஷ்  மற்றும் தாளமுத்துநகர் காவல் நிலைய ஆய்வாளர் ஜெயந்தி உட்பட போலீசார் அங்கு சட்டவிரோத கடத்தலில் ஈடுபட்ட தூத்துக்குடி டூவிபுரத்தைச் சேர்ந்த சாமுவேல் மகன் தவசிமணி (21) கைது செய்தும், ரேசன் பொருட்களை சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த TN 75 A 9399 Ashok Leyland லாரி, TN 72 F 1177, TN 69 H 0831 ஆகிய 2 Omni கார்கள் மற்றும்  TN 67 F 3071, TN 69 Q 9562 ஆகிய 2 Tata Ace சரக்கு வாகனங்கள் என மொத்தம் 5 வாகனங்கள் உட்பட சுமார் 25 டன் ரேசன் பொருட்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்து தூத்துக்குடி குடிமைப்பொருள் குற்ற புலனாய்வு துறையிடம் ஒப்படைத்தனர்.

  • Share on

தூத்துக்குடியில் ஏற்றுமதி நிறுவன உரிமையாளரிடம் ரூபாய் 6,75,000 பணம் மோசடியில் ஈடுபட்டவர் கைது!

மாப்பிள்ளையூரணியில் மகளிர் தின விழா!

  • Share on