• vilasalnews@gmail.com

தூத்துக்குடியில் ஏற்றுமதி நிறுவன உரிமையாளரிடம் ரூபாய் 6,75,000 பணம் மோசடியில் ஈடுபட்டவர் கைது!

  • Share on

தூத்துக்குடியில் ஏற்றுமதி நிறுவன உரிமையாளரிடம் ரூபாய் 6,75,000 பணம் மோசடியில் ஈடுபட்டவரை போலீசார் இன்று கைது செய்தனர்.

கன்னியாகுமரி மாவட்டம், நெய்யூர், பெரியாபள்ளி பகுதியைச் சேர்ந்த சத்தியராஜ் மகன் சஜின் (33) என்பவர் காஞ்சிபுரம் மாவட்டம் மறைமலைநகர் பகுதியில் ஏற்றுமதி நிறுவனம் வைத்துள்ளார். இந்நிலையில் இவரது ஏற்றுமதி நிறுவனத்தில் தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் மணிநகரைச் சேர்ந்த ராமகிருஷ்ணன் மகன் தனசெல்வகணேஷ் (34) என்பவர் சஜினிடம் கொழும்புவிலுள்ள ஒரு தனியார் நிறுவனத்திற்கு ரூபாய் 9 லட்சத்து 75 ஆயிரம் மதிப்புள்ள 25 டன் வெங்காயம் ஏற்றுமதி செய்து கொடுக்கும் படி கேட்டுள்ளார். இதனையடுத்து சஜின் தனது நிறுவனத்தின் மூலம் தூத்துக்குடி துறைமுகம் வழியாக 25 டன் வெங்காயத்தை கொழும்புவிலுள்ள அந்த நிறுவனத்திற்கு ஒரு கண்டெய்னரில் ஏற்றுமதி செய்துள்ளார்.

இந்நிலையில் சஜின் அவரது நிறுவனத்தின் மூலம் ரூபாய் 9,75,000 மதிப்புள்ள 25 டன் வெங்காயத்தை ஏற்றுமதி செய்ததற்கு தனசெல்வகணேஷ் சஜினுக்கு இருதவணைகளில் மொத்தம் 3 லட்சம்  பணத்தை மட்டும் கொடுத்து மீதி ரூபாய் 6,75,000 பணத்திற்கு வங்கி காசோலை கொடுத்துள்ளார்.  இதனையடுத்து அந்த காசோலையில் பணம் இல்லாமல் மோசடி செய்யப்பட்டது சஜினுக்கு தெரிய வந்துள்ளது.

இதுகுறித்து சஜின் அளித்த புகாரின் பேரில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவுபடி மாவட்ட குற்றப்பிரிவு காவல் துணை கண்காணிப்பாளர் ஜெயராம் அவர்கள் மேற்பார்வையில் காவல் ஆய்வாளர் வனிதாராணி, சிறப்பு உதவி ஆய்வாளர் சண்முகசுந்தரம், தலைமைக் காவலர் பிள்ளைமுத்து தலைமையிலான போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு மேற்படி  தனசெல்வகணேஷ் யைஇன்று (08.03.2022) கைது செய்தனர்.

  • Share on

தூத்துக்குடியில் மழைநீர் தேங்கிய பகுதியில் மேயர் ஜெகன் பெரியசாமி பார்வையிட்டார்.

மாப்பிள்ளையூரணி குடோனில் ரேஷன் அரிசி பதுக்கல் - ஒருவர் கைது...லாரி உட்பட 5 வாகனங்கள் மற்றும் ரேசன் பொருட்கள் பறிமுதல்!

  • Share on