• vilasalnews@gmail.com

தூத்துக்குடியில் மழைநீர் தேங்கிய பகுதியில் மேயர் ஜெகன் பெரியசாமி பார்வையிட்டார்.

  • Share on

தூத்துக்குடியில் மழைநீர் தேங்கிய பகுதியில் மேயர் ஜெகன் பெரியசாமி பார்வையிட்டார்.

தூத்துக்குடி மாநகர பகுதியில் இன்று செவ்வாய் அதிகாலை பெய்த மழையால் சில பகுதிகளில் மழைநீர் தேங்கியது. இதுகுறித்து மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமிக்கு பொதுமக்கள் வாட்ச்அப் மூலம் குறைகளை தெரிவித்தனர்.

இதையடுத்து தூத்துக்குடி 40-வது வார்டுக்கு உட்பட்ட செயின் மீட்டர் கோவில் தெரு, மரக்குடி தெரு, தெற்கு காட்டன் ரோடு ஆகிய பகுதிகளில் பார்வையிட்டு மாநகராட்சி லாரியின் மூலம் தேங்கிய தண்ணீரை அகற்றுவதற்கு மேயர் ஜெகன் பெரியசாமி உத்தரவிட்டார்.

மேலும், கழிவுநீர் கால்வாய்களில் உள்ள கழிவு குப்பைகள் மற்றும் தேவையில்லாத பொருட்களை அப்புறப்படுத்தி தடையின்றி கழிவுநீர் செல்வதற்கு உத்தரவிட்டார்.

மேயருடன் கிழக்கு மண்டல சுகாதார ஆய்வாளர் பாக்கிய ஸ்டாலின், மாநகராட்சி நிர்வாகத்தை சேர்ந்த பாலு, தேன்ராஜ், செந்தில், மாமன்ற உறுப்பினர் ரிக்ட்டா, ஆர்தர் மச்சாது, வட்டச்செயலாளர் டென்சிங், மாவட்ட மீனவர் அணி துணைச் செயலாளர் சேசையா, தொழிற்சங்க செயலாளர் மரியதாஸ், மாநகர மீனவர் அணி துணைச் செயலாளர் ஆர்தர் மச்சாது, நிர்வாகிகள் சுரேஷ், விளாரி, ஜோன்ஸ், விஜய், ஜெகன், எடின்டா, சுகுமார், ஜோஸ்பர் உள்பட பலர் உடன் இருந்தனர்.

  • Share on

பட்டினமருதூர் அருகே இருசக்கர வாகனத்தை திருடியவர் கைது!

தூத்துக்குடியில் ஏற்றுமதி நிறுவன உரிமையாளரிடம் ரூபாய் 6,75,000 பணம் மோசடியில் ஈடுபட்டவர் கைது!

  • Share on