• vilasalnews@gmail.com

பட்டினமருதூர் அருகே இருசக்கர வாகனத்தை திருடியவர் கைது!

  • Share on

பட்டினமருதூர் அருகே இருசக்கர வாகனத்தை திருடியவர் கைது செய்யப்பட்டு அவரிடமிருந்து ரூபாய் 30,000 மதிப்பிலான இருசக்கர வாகனத்தை போலீசார் மீட்டனர்.

தருவைகுளம் பட்டினமருதூர் நடுத்தெருவைச் சேர்ந்த தாழையுத்தான் மகன் கருப்பசாமி (24) என்பவர் நேற்று (07.03.2022) பட்டினமருதூர் அருகே உள்ள விநாயகர் கோவில் அருகே தனது இருசக்கர வாகனத்தை நிறுத்தி விட்டு சிறிது நேரம் கழித்து வந்து பார்க்கும்போது அந்த இரு சக்கர வாகனம் திருடு போயுள்ளது.

இதனையடுத்து கருப்பசாமி அளித்த புகாரின் பேரில் தருவைக்குளம் காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டதில் தூத்துக்குடி தாளமுத்துநகர் லூர்தம்மாள்புரத்தைச் சேர்ந்த சக்திவேல் மகன் நந்தகுமார் (21) என்பவர் மேற்படி கருப்பசாமி என்பவரது இருசக்கர வாகனத்தை திருடியது தெரியவந்தது.

இதுகுறித்து தருவைகுளம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் சரவணன் வழக்கு பதிவு செய்து நந்தகுமாரை கைது செய்து, அவரிடமிருந்து திருடப்பட்ட ரூபாய் 30,000/- மதிப்பிலான  இருச்சக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்தார்.

  • Share on

உலக மகளிர் தினத்தை முன்னிட்டு தூத்துக்குடி மேலசண்முகபுரம் பிரசித்தி பெற்ற பத்திரகாளி அம்மன் கோவிலில் சிறப்பு பூஜை நடைபெற்றது

தூத்துக்குடியில் மழைநீர் தேங்கிய பகுதியில் மேயர் ஜெகன் பெரியசாமி பார்வையிட்டார்.

  • Share on