உலக மகளிர் தினத்தை முன்னிட்டு தூத்துக்குடி மேலசண்முகபுரம் பிரசித்தி பெற்ற பத்திரகாளி அம்மன் கோவிலில் சிறப்பு பூஜை நடைபெற்றது.
தூத்துக்குடி மேலசண்முகபுரம் அருள்மிகு ஸ்ரீ பத்திரகாளி அம்மன் கோவிலில் உலக மகளிர் தினத்தை முன்னிட்டு விக்னேஸ்வர பூஜை புண்யாக வாசனம், பஞ்சகவ்யம், கும்ப பூஜை (108) அஷ்டோத்தர கலச பூஜை, கணபதி ஹோமம், நவக்ரஹ ஹோமம் சுதர்சன ஹோமம், ஐஸ்வர்ய ஹோமம், சக்தி ஹோமம், திரவ்யாகுதி, பூர்ணாகுதி 108 கலசாபிஷேகம் கண்ணன் பட்டர் தலைமையில் ஓமகுண்டம் சிறப்பு அர்ச்சனை பூஜைகள், மந்திரங்கள் கூறி நடைபெற்றது.
அம்மனுக்கு அலங்காரம் செய்து சிறப்பு தீபாராதனை பூஜைகள் நடைபெற்று அன்னதானம் பக்தர்களுக்கு வழங்கப்பட்டது. நல்ல மழை பெய்து விவசாயம் செழித்து நல்ல வளமான தொழில் அனைவருக்கும் அமையவேண்டும்.
கொரோனா உள்ளிட்ட நோய் தொற்றுகளிலிருந்து நாட்டு மக்களை காப்பாற்றி நல்ல ஆரோக்கியமான வாழ்க்கையை அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என வேண்டி மகளிர் தினத்தையொட்டி திருவிளக்கு பூஜை சிறப்பாக நடைபெற்றது.
நிகழ்சிக்கான ஏற்பாடுகளை கோவில் தர்மகர்த்தா சித்திரை விஜயன், பொருளாளர் முருகேசன், நிர்வாகக் கமிட்டி உறுப்பினர்கள் லிங்கராஜ், ஈஸ்வரன், முத்துபாலகிருஷ்ணன், பால்ராஜ், வாசு, காசிலிங்கம், மாரியப்பன், அமிர்தகணேசன், தேன்ராஜ், பாபுஜி, மணி, மாரிமுத்து, பொன்னுதுரை, சுந்தரகுமார், கதிரேசன், கார்த்தீசன், கோவில் பூசாரி மணிகம்பர் செய்திருந்தனர். மற்றும் தூத்துக்குடி பிரஸ் கிளப் தலைவர் சண்முகசுந்தரம், மகளிர்கள், பொதுமக்கள், பக்தர்கள் என திரளானோர் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்