• vilasalnews@gmail.com

மாநில அளவிலான சிலம்பாட்ட போட்டி : தூத்துக்குடி மாணவர்கள் சாதனை!

  • Share on

மதுரையில் நடைபெற்ற மாநில அளவிலான சிலம்பாட்ட போட்டியில், தூத்துக்குடி மாணவர்கள் கலந்து கொண்டு தங்கம் உள்ளிட்ட பல்வேறு பதக்கங்களை பெற்று சாதனை படைத்துள்ளனர்.

மதுரை பாத்திமா கல்லூரி விளையாட்டு  அரங்கத்தில் வைத்து 6.03.2022 அன்று நடைபெற்ற   மாநில அளவிலான சிலம்பாட்டப் போட்டியில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து 400க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர். இப்போட்டியின் தலைமை நடுவராக  தமிழ் பாரம்பரிய சிலம்பம் பள்ளியின் பொதுச் செயலாளர் ஆசான் சுரேஷ்குமார்  செயல்பட்டார்.

இப்போட்டியில் தூத்துக்குடி மாவட்டம் முத்தையாபுரத்தை சேர்ந்த மாணவர்கள் தனித் திறமை மற்றும் சண்டை பிரிவில் பங்கேற்று  12 தங்கப் பதக்கமும், 5 வெள்ளிப் பதக்கமும், 4 வெண்கல பதக்கமும் வென்று சாதனை படைத்தனர். 

வெற்றி பெற்ற மாணவர்களை தமிழ் பாரம்பரிய சிலம்ப பள்ளியின் மாவட்ட தலைவர் செந்தில், மாவட்ட செயலாளர் முத்துராஜா, விருட்சம் சிலம்பம் பயிற்சி கூடத்தின் பயிற்சியாளர் முனியசாமி மற்றும் இசக்கிராஜா ஆகியோர் பாராட்டினர்.

  • Share on

தூத்துக்குடி மாநகராட்சி 60 வார்டுகளில் 2492 லைட்டுகள் அமைக்க 4.6 கோடி ஓதுக்கீடு மேயர் ஜெகன் பெரியசாமி ஒதுக்கீடு!

உலக மகளிர் தினத்தை முன்னிட்டு தூத்துக்குடி மேலசண்முகபுரம் பிரசித்தி பெற்ற பத்திரகாளி அம்மன் கோவிலில் சிறப்பு பூஜை நடைபெற்றது

  • Share on