தூத்துக்குடி மாநகராட்சி 60 வார்டுகளில் 2492 லைட்டுகள் அமைக்க 4.6 கோடி ஓதுக்கீடு செய்ய மேயர் ஜெகன் பெரியசாமி முதல் கையெழுதிட்டார்.
தூத்துக்குடி மாநகராட்சி குடியிருப்பு பகுதிகளில் இருளை நீக்கி பகல் போல் பளிச்சிடும் வகையில் பொதுமக்கள் அச்சமின்றி செல்லும் வகையில் 2492 எல்இடி புதிய லைட்டுகள் அமைப்பதற்கான முதல் கோப்பில் மேயர் ஜெகன் பெரியசாமி கையெழுத்திட்டுள்ளார்.
இதுகுறித்து அவர் தெரிவிக்கையில், தூத்துக்குடி மாநகர மக்களின் அடிப்படை வசதிகளை 100 சதவீகீதம் தீர்க்கும் வகையில் நடவடிக்கை எடுத்து செயல்படுவேன். இதனடிப்படையில் மேயராக பதவியேற்றவுடன் முதல் கோப்பாக பொதுமக்களின் தெருவிளக்கு பிரச்சனையை தீர்க்கும் வகையில் தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளில் 666 கிமீ தூரத்திற்கு ரோடுகள் உள்ளன, 30 மீட்டருக்கு ஓரு மின்கம்பம் வைத்து லைட் வசதி செய்து கொடுக்க வேண்டும் என்பது மாநகராட்சியின் விதிமுறையாகும். இதனடிப்படையில் பார்த்தால் மொத்தம் சுமார் 25 ஆயிரம் லைட்டுகள் இருக்க வேண்டும் ஆனால் மாநகராட்சி பகுதியில் 17 ஆயிரம் லைட்டுகள் தான் உள்ளது. மக்களின் அடிப்படை தேவையான தெருவிளக்கு குடிதண்ணீர் சுகாதார வசதிகளை 100 சதவீதம் மக்களுக்கு நாம் நிறைவேற்றி கொடுக்க வேண்டும் என்று மாநகராட்சி ஆணையர் மற்றும் அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளேன்.
இதனடிப்படையில் மேயராக பொறுப்பேற்றவுடன் மாநகராட்சி பகுதியில் விடுப்பட்ட தெருவிளக்கு வசதிகள் இல்லாத பகுதிகளில் புதிதாக 2492 லைட்டு வசதிகள் செய்து கொடுக்க 4 கோடியே 60 லட்சம் செலவில் அமைக்கும் பணிக்கான கோப்பில் முதல் கையெழுத்திட்டுள்ளேன். 60 வார்டு பகுதிகளிலும் லைட் அமைக்கப்படுகிறது. ஸ்மார்ட் சிட்டி திட்ட நிதியின் மூலமோ அல்லது அரசின் நிதி பெற்றோ இந்த பணியினை விரைவாக மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும். மாநகர பகுதிகளில் எந்த ஒரு இடத்திலும் தெரு விளக்கு இல்லை என்ற நிலையை மாற்றி இருள் இல்லாத மாநகராட்சியை உருவாக்குவதற்கு முதல் கட்ட நடவடிக்கை தான் எடுக்கப்பட்டுள்ளது. அனைத்து பணிகளும் மக்களுக்காக நடைபெறும் என்றார்.
மாநகர திமுக செயலாளர் ஆனந்தசேகரன். மாநில மீனவரணி துணைச் செயலாளர் புளோரன்ஸ். மாநில காங்கிரஸ் துணைத் தலைவர் சண்முகம். மாவட்ட தலைவர் முரளிதரன். ஐ.என்.டி.யூ.சி தலைவர் ராஜ். சி.பி.எம் மாவட்ட செயலாளர் ஆறுமுகம். மாநகர செயலாளர் ராஜா. சி.பி.ஐ. மாநகர செயலாளர் ஞானசேகர். இந்திய யூனியன் முஸ்லீம் லிக் மாவட்ட தலைவர் மீராஷா. மதிமுக இலக்கிய அணி துணை செயலாளர் மகாராஜன். வக்கீல் சங்கத்தலைவர் செங்குட்டுவன். தூத்துக்குடி பிரஸ் கிளப் தலைவர் சண்முகசுந்தரம். லாரி புக்கிங் சங்கத்தலைவர் சுப்புராஜ். திமுக மாவட்ட அவை தலைவர் செல்வராஜ். துணை செயலாளர் ஆறுமுகம். பொருளாளர் ரவீந்திரன். மாவட்ட பொறியாளர் அணி செயலாளர் அன்பழகன். தொண்டரணி செயலாளர் ரமேஷ். ஆதிதிராவிட நல அணி செயலாளர் பரமசிவம். மகளிர் அணி செயலாளர் கஸ்தூரி தங்கம். மாவட்ட மாணவரணி துணை செயலாளரும், மாமன்ற உறுப்பினருமான வக்கீல் பாலகுருசாமி. மாவட்ட இலக்கிய அணி துணை செயலாளர் நலம் ராஜேந்திரன். மாநகர வர்த்தக அணி துணை செயலாளர் கிறிஸ்டோபர் விஜயராஜ். மாநகர ஆதிதிராவிட நல அணி துணை செயலாளர் பால்ராஜ். பகுதி செயலாளர் ரவீந்திரன். மாவட்ட பிரதிநிதிகள் ராஜ்குமார், கதிரேசன், அன்டன் பொன்சேகா. அரசு வக்கீல்கள் மோகன்தாஸ், சுபேந்திரன், மாலாதேவி. பொதுக்குழு உறுப்பினர் கோட்ராஜா. தொழிற்சங்க செயலாளர் மரியதாஸ். மாநகர மீனவரணி செயலாளர் டேனி. துணை செயலாளர் ஆர்தர் மச்சாது. மாநகர மாணவரணி துணை செயலாளர் பால்மாரி. மாநகர இளைஞரணி துணை செயலாளர்கள் செல்வின், அருண்சுந்தர். வட்டச் செயலாளர்கள் நாராயணன், டென்சிங், பொன்ராஜ், ஏசுவடியான், சேகர், ரவீந்திரன், முனியசாமி, சுரேஷ், மூக்கையா. பகுதி இளைஞரணி செயலாளர் சூர்யா, ரவி. வக்கீல் சீனிவாசன், சதீஸ்குமார். போல்பேட்டை பகுதி பிரதிநிதிகள் பிரபாகர், லிங்கராஜா. மாவட்ட மாணவரணி துணை செயலாளர் முத்துதுரை, வாள் வழங்கினார் மற்றும் அற்புதராஜ், அருணகிரி, ஸ்டாலின், மாயா என்ற முத்துகிருஷ்ணன், கருணா, மணி, அல்பட். கீதாசெல்வமாரியப்பன். பகுதி செயலாளர் சிவகுமார். முன்னாள் கவுன்சிலர்கள் செல்வகுமார், செந்தில்குமார், சங்கர் என பல்வேறு அமைப்புகள் நிர்வாகிகளை சேர்ந்தவர்கள் மாலை, சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.