தூத்துக்குடியில் சிறுவர், சிறுமியர்கள் கடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி ராஜகோபால் நகரைச் சேர்ந்தவர் கிரேசி விஜயா (36), இவருக்கும் மடத்தைச் சேர்ந்த ஞானமுத்து மகன் தாசில்தாரான ஞானராஜ் என்பவருக்கும் 14 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது.
இத்தம்பதியருக்கு, ஞான ஜெரிஸ் (13), என்ற மகனும் பியோனா மரியா (11), என்ற மகளும் உள்ளனர். குடும்பத் தகராறு காரணமாக கணவரை பிரிந்து குழந்தைகளுடன் தனியாக வசித்து வருகிறார். மகனும் மகளும் தூத்துக்குடி மரவன்மடம் பள்ளியில் படித்து வருகின்றனர். நேற்று வழக்கம்போல் பள்ளிக்கு சென்று ஞான ஜெரிஸ், பியோனா மரியா ஆகியோர் 4:30 மணி அளவில் பர்மா காலனியில் பள்ளி பஸ்சில் வந்து இறங்கினர். அங்கிருந்து வீட்டுக்கு வர ஆட்டோவில் ஏறிய போது அப்போது அங்கு வந்த ஆறு பேர் ஆட்டோவை வழிமறித்து டிரைவரின் செல்போனை பறித்து வீசினார். பின்னர், ஞான ஜெரிஸ், பியோனா மரியாவை வலுக்கட்டாயமாக இழுத்து காரில் ஏற்றி கடத்திச் சென்றுவிட்டார்.
இதுகுறித்து தூத்துக்குடி சிப்காட் போலீசில் புகார் செய்தார். போலீசார் விசாரணை நடத்தி சிறுவர் சிறுமியரை தேடி வருகின்றனர்.