பிப்ரவரி 4, வெள்ளி மனுதாக்கல் மார்ச் 4 வெள்ளி அன்று மேயர்! தூத்துக்குடி ஜெகன் பெரியசாமிக்கு கனிமொழி எம்.பி, அமைச்சர் கீதாஜீவன் வாழ்த்து தெரிவித்தனர்.
தூத்துக்குடி மாநகராட்சியில் நடைபெற்ற தேர்தலில் 60 வார்டுகளில் திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் 53 பேர் வெற்றி பெற்றிருந்தனர். 20வது வார்டில் போட்டியிட்டு வெற்றி பெற்ற ஜெகன் பெரியசாமியை மேயர் வேட்பாளராக திமுக தலைமை அறிவித்திருந்தது. இந்நிலையில், மாநகராட்சி ஆணையர் சாருஸ்ரீ-யிடம் 45வது வார்டு திமுக உறுப்பினர் ராமகிருஷ்ணன் முன்மொழிய 39வது வார்டு திமுக உறுப்பினர் சுரேஷ்குமார் வழிமொழிந்திருந்தார். வேறு யாரும் வேட்புமனுதாக்கல் செய்யாத நிலையில் 53 பேர் கலந்து கொண்ட கூட்டத்தில் ஜெகன் பெரியசாமி தூத்துக்குடி மாநகராட்சி மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டதாக ஆணையர் சாருஸ்ரீ அறிவித்தார்.
இதனை தொடர்ந்து அவரை அழைத்து சென்று மேயருக்கான அங்கி மற்றும் தங்க சங்கலி அணிந்து செங்கோல் வழங்கப்பட்டு கூட்டரங்கில் அமர வைத்தனர். புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட மேயர் ஜெகன் பெரியசாமிக்கு கனிமொழி எம்.பி., சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன், சண்முகையா எம்.எல்.ஏ., ஆகியோர் வாழ்த்து தெரிவித்தனர்.
மாநகர திமுக செயலாளர் ஆனந்தசேகரன். மாநில மீனவரணி துணைச் செயலாளர் புளோரன்ஸ். மாநில காங்கிரஸ் துணைத் தலைவர் சண்முகம். மாவட்ட தலைவர் முரளிதரன். ஐ.என்.டி.யூ.சி தலைவர் ராஜ். சி.பி.எம் மாவட்ட செயலாளர் ஆறுமுகம். மாநகர செயலாளர் ராஜா. சி.பி.ஐ. மாநகர செயலாளர் ஞானசேகர். இந்திய யூனியன் முஸ்லீம் லிக் மாவட்ட தலைவர் மீராஷா. மதிமுக இலக்கிய அணி துணை செயலாளர் மகாராஜன். வக்கீல் சங்கத்தலைவர் செங்குட்டுவன். தூத்துக்குடி பிரஸ் கிளப் தலைவர் சண்முகசுந்தரம். லாரி புக்கிங் சங்கத்தலைவர் சுப்புராஜ். திமுக மாவட்ட அவை தலைவர் செல்வராஜ். துணை செயலாளர் ஆறுமுகம். பொருளாளர் ரவீந்திரன். மாவட்ட பொறியாளர் அணி செயலாளர் அன்பழகன். தொண்டரணி செயலாளர் ரமேஷ். ஆதிதிராவிட நல அணி செயலாளர் பரமசிவம். மகளிர் அணி செயலாளர் கஸ்தூரி தங்கம். மாவட்ட மாணவரணி துணை செயலாளரும், மாமன்ற உறுப்பினருமான வக்கீல் பாலகுருசாமி. மாவட்ட இலக்கிய அணி துணை செயலாளர் நலம் ராஜேந்திரன். மாநகர வர்த்தக அணி துணை செயலாளர் கிறிஸ்டோபர் விஜயராஜ். மாநகர ஆதிதிராவிட நல அணி துணை செயலாளர் பால்ராஜ். பகுதி செயலாளர் ரவீந்திரன். மாவட்ட பிரதிநிதிகள் ராஜ்குமார், கதிரேசன், அன்டன் பொன்சேகா. அரசு வக்கீல்கள் மோகன்தாஸ், சுபேந்திரன், மாலாதேவி. பொதுக்குழு உறுப்பினர் கோட்ராஜா. தொழிற்சங்க செயலாளர் மரியதாஸ். மாநகர மீனவரணி செயலாளர் டேனி. துணை செயலாளர் ஆர்தர் மச்சாது. மாநகர மாணவரணி துணை செயலாளர் பால்மாரி. மாநகர இளைஞரணி துணை செயலாளர்கள் செல்வின், அருண்சுந்தர். வட்டச் செயலாளர்கள் நாராயணன், டென்சிங், பொன்ராஜ், ஏசுவடியான், சேகர், ரவீந்திரன், முனியசாமி, சுரேஷ், மூக்கையா. பகுதி இளைஞரணி செயலாளர் சூர்யா, ரவி. வக்கீல் சீனிவாசன், சதீஸ்குமார். போல்பேட்டை பகுதி பிரதிநிதிகள் பிரபாகர், லிங்கராஜா. மாவட்ட மாணவரணி துணை செயலாளர் முத்துதுரை, வாள் வழங்கினார் மற்றும் அற்புதராஜ், அருணகிரி, ஸ்டாலின், மாயா என்ற முத்துகிருஷ்ணன், கருணா, மணி, அல்பட். கீதாசெல்வமாரியப்பன். பகுதி செயலாளர் சிவகுமார். முன்னாள் கவுன்சிலர்கள் செல்வகுமார், செந்தில்குமார், சங்கர் என பல்வேறு அமைப்புகள் நிர்வாகிகளை சேர்ந்தவர்கள் மாலை, சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர். நிகழ்ச்சியில் மேயரின் தாயார் எபநேசர் மற்றும் அவரது உடன்பிறந்த சகோதரி மற்றும் குடும்பத்தினர் கலந்து கொண்டனர்.
முன்னதாக தாயாரிடம் ஆசி பெற்று மற்றும் தந்தை பெரியசாமி நினைவிடம் கிறிஸ்தவ தேவாலயம், புதிய பேருந்து நிலையம் விநாயகர் கோவிலில் சென்று வழிப்பட்டு பொறுப்பேற்க வந்த மேயர் ஜெகன் பெரியசாமியின் தந்தை பெரியசாமி எந்தவொரு பணியை செய்தாலும் புதிய பேருந்து நிலையம் அருகிலுள்ள விநாயகர் கோவிலில் வணங்கிவிட்டு தனது அரசியல் பணியை மட்டுமின்றி வேட்புமனு தாக்கல் செய்வது பிரச்சாரம் மேற்கொள்வது என அனைத்தையும் வெள்ளிக்கிழமை அன்று தான் செய்வார் அதனால் அவரை எல்லோரும் வெள்ளிக்கிழமை ராசிக்காரர் என்பார்கள்.
இன்று மேயராக பொறுப்பேற்றுள்ள ஜெகன் பெரியசாமி பிப்ரவரி 4ம் தேதி வெள்ளிக்கிழமை மாமன்ற உறுப்பினர் பதவிக்கு தேர்தல் அதிகாரிகளிடம் மனுதாக்கல் செய்தார். அன்றைய தினம் விநாயகர் கோவிலில் வழிப்பட்டு பகுதிக்குட்பட்ட பகுதிகளில் தேர்தல் பிரச்சாரத்தை அமைச்சர் கீதாஜீவன் முன்னிலையில் தொடங்கினார். மார்ச் 4ம் தேதி வெள்ளிக்கிழமை மேயருக்கான வேட்புமனுவை தாக்கல் செய்து மேயராக பொறுப்பேற்றுள்ளார். அனைத்தும் வெள்ளிக்கிழமை என்பது குறிப்பிடத்தக்கது. மாமன்ற உறுப்பினர் காந்திமணி, சுப்புலெட்சுமி, ரெங்கசாமி, நாகேஸ்வரி, அந்தோணிபிரகாஷ் மார்சலின், ஜெயசீலி நிர்மல்ராஜ், பவானி, ஜெபஸ்டின் சுதா, கற்பகனி, தெய்வேந்திரன், ஜாக்குலின் ஜெயா, கீதாமுருகேன், இசக்கிராஜா, கண்ணன், ராமர், சீனிவாசன், சோமசுந்தரி, ஜான்சிராணி, மகேஸ்வரி, தனலெட்சுமி, மெட்டில்டா, எடிண்டா, மரியகீதா, சரண்யா, ராமு அம்மாள், கலைச்செல்வி, அதிர்ஷ்டமணி, கனகராஜ், கந்தசாமி, பொன்னப்பன், சந்திரபோஸ்;;, விஜயலெட்சுமி, பாப்பாத்தி, மும்தாஜ், சுரேஷ்குமார், ரிக்டா, பேபி ஏஞ்சலின், முத்துமாரி, ராமகிருஷ்ணன், ஜெனிட்டா, ரெக்சிலின், ராஜேந்திரன், வைதேகி, சரவணகுமார், முத்துவேல், விஜயகுமார், ராஜதுரை, சுயம்பு, பச்சிராஜ் உள்ளிட்டோர்கள் வாழ்த்து தெரிவித்தனர்..