மாப்பிள்ளையூரணியில் முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி ஊராட்சி மன்ற தலைவர் சரவணக்குமார் இனிப்பு வழங்கினார்.
திமுக தலைவரும், தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் 69வது பிறந்தநாளை முன்னிட்டு தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளரும் மீன்வளம் மற்றும் கால்நடைத்துறை அமைச்சருமான அனிதா ராதாகிருஷ்ணன், ஆலோசனை படி ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மாப்பிள்ளையூரணி ஊராட்சி பகுதியில் ஊராட்சி மன்ற தலைவர் சரவணக்குமார் இனிப்பு வழங்கினார்.
நிகழ்ச்சியில், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் மகேஸ்வரி காமராஜ், பாரதிராஜா, தங்க மாரிமுத்து, கூட்டுறவு கடன்சங்க துணைத்தலைவர் சிவக்குமார், மற்றும் அங்காளஈஸ்வரி, கௌதம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.