1986ல் திமுக மாவட்ட செயலாளர் பெரியசாமி நகர்மன்ற தலைவர் 2022ல் ஜெகன் பெரியசாமி மேயர்!.
தூத்துக்குடி நகரம் பழைமை வாய்ந்த நகரமாகும். தூத்துக்குடி நகருக்கு வல்லநாட்டிலிருந்து குடிதண்ணீர் கொண்டு வந்த குரூஸ்பர்னாந்து அதன் பின் பணியாற்றிய பல தலைவர்களுக்கு என தனி வரலாறும், சிறப்பு உண்டு. ஆனால் திமுக-வில் மாவட்ட செயலாளராக அவர் மறையும் வரை பணியாற்றிய பெரியசாமி ஒரே நேரத்தில் பல பதவிகளை வைத்துக் கொண்டு பணியாற்றிய காலம் தான் இன்று வரை அவருடைய வாழ்க்கை பணிகளையும் மக்கள் மறக்காமல் நினைத்து வருவதுமட்டுமின்றி, நினைவுக்கூர்ந்தும் வருகின்றனர்.
1986ல் மறைந்த பெரியசாமி நகர்மன்ற தலைவராக இருந்த காலத்தில் அரசு அதிகாரிகள், பணியாளர்கள் ஆகியோருடன் இணைந்து நல்லப் பணியை ஆற்றியக்காலம் சட்டமன்ற உறுப்பினராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டு பணி செய்த காலத்தில் இப்போது கம்பீரமாக எழுந்து கொண்டிருக்கும் இப்போதைய பழைய பேருந்து நிலையத்தை அப்போது சீர்செய்து கொடுத்தார்.
வடக்கு பகுதி வளர்ச்சியடைய வேண்டுமென்பதற்காக புதிய பேருந்து நிலையம் உழவர் சந்தை, பத்திரப்பதிவு அலுவலகம் என புதிய திட்டங்களை கொண்டு வந்து மாநகரில் வளர்ச்சிக்கு உழைத்திட்டவர் அவர்,
அவருக்கு பெருமைச் சேர்க்கும் வகையில் பல்வேறு தொழிற்சங்கங்களில் பொறுப்பு வகித்து தொழிலாளர்களின் தோழன் என்ற புகழோடு இப்போது அமைச்சராக இருக்கும் கீதாஜீவன், ஜெகன் ஆகியோரை அரசியல் களத்தில் இறக்கிவிட்டு மாவட்ட மக்களுக்காக பணியாற்றிய காலத்தில் தமிழகத்தின் 10வது மாநகராட்சியாக கடந்த 2008ம் ஆண்டு ஆகஸ்டு 05ம் தேதி தமிழகம் முதலமைச்சராக இருந்த மு.கருணாநிதி உள்ளாட்சித்துறை அமைச்சராக இருந்த மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தூத்துக்குடியில் நடைபெற்ற விழாவில் தரம் உயர்த்தினார்.
அப்போது நகர்மன்ற தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட கஸ்தூரி தங்கம் மேயராக பொறுப்பேற்றுக் கொண்டார். அவருக்கு மறைந்த பெரியசாமி தனது சொந்த பணத்தில் 111 பவுன் தங்க சங்கலியை கலைஞர் கையில் கொடுத்து அணிவிக்க செய்து மேயர் ஆசனத்தில் அமர வைத்து அழகு பார்த்தவர்
அதன்பின், பலர் மேயராக பணியாற்றிய காலம் உண்டு. பல ஆண்டுகளாக உள்ளாட்சி தேர்தல் நடைபெறாமல் இருந்த நிலையில் பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி உறுப்பினர் தேர்தலை தமிழக முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் நடத்திக் காட்டியுள்ளார். அதில் வெற்றிப்பெற்ற உறுப்பினர்கள் அனைவரும் 4ம் தேதி பேரூராட்சி தலைவர், துணை தலைவர், நகராட்சி தலைவர், துணைத் தலைவர், மாநகராட்சி மேயர் மற்றும் துணை மேயர் பொறுப்புகள் தேர்ந்தெடுக்கப்பட்டு மாநகராட்சி நிர்வாகம் முறையாக பல ஆண்டுகளுக்கு பின் செயல்பட உள்ளது.
திமுக மற்றும் கூட்டணிக் கட்சியை சேர்ந்த 53 பேர் திமுக மேயர், துணை மேயருக்கு துணையாக இருந்து பணியாற்ற உள்ளனர். மாற்று கட்சியை சேர்ந்த 6 பேர் சுயேட்சை ஒருவர் என 60 பேர் கொண்ட உறுப்பினர்களோடு செயல்பட உள்ள மாநகராட்சி நிர்வாகத்தை மறைந்த திமுக மாவட்ட செயலாளர் பெரியசாமியின் புதல்வனும், அமைச்சர் கீதாஜீவன் தம்பியுமான பொதுக்குழு உறுப்பினர் ஜெகன் பெரியசாமி பணியாற்ற உள்ளார்.
உறுப்பினராக பொறுப்பேற்ற கொண்ட போது மறைந்த முதலமைச்சர் கலைஞர் அவரது தந்தை பெரியசாமி ஆசியுடன் தமிழக முதல்வர் தளபதியார் அக்கா கனிமொழி எம்.பி., அமைச்சர் கீதாஜீவன், இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ., ஆகியோர் எனக்கு பணி செய்ய வாய்ப்பளித்தற்கு நன்றி என தெரிவித்துக் கொண்டார்.
மாநகரில் அனைத்து பணிகளையும் முழுமையாக திமுக ஆட்சியில் நிறைவேறும் என்ற நம்பிக்கை மக்கள் மத்தியில் உள்ளது. அதிலும் மறைந்த முன்னாள் நகர்மன்ற தலைவர் பெரியசாமியின் மகன் ஜெகன் பெரியசாமி மேயராக பணியாற்றினார். இன்னும் கூடுதலாக மக்கள் பணியாற்றுவார் என்ற நம்பிக்கை அனைத்து தரப்பினரிடமும் இருந்து வருகிறது.
1986ல் நகர்மன்ற தலைவர் பதவியில் அமர்ந்து பணியாற்றிய பெரியசாமியின் மகன் ஜெகன் பெரியசாமி 2022ல் மாநகராட்சி மேயராக பொறுப்பேற்று பணியாற்ற உள்ள அவருக்கு அனைத்து தரப்பினரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.