தூத்துக்குடி டேக்வாண்டோ ராமலிங்க பாரதிக்கு பாராட்டு
தூத்துக்குடி டேக்வாண்டோ அமைப்பில் பொறுப்பு வகித்து பல்வேறு விளையாட்டு வீரர்களை ஊக்குவித்து மாவட்ட மாநில தேசிய அளவில் நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்டு தங்கம், வெள்ளி, வெண்கலம் போன்ற பல பதக்கங்களை பெற்று தூத்துக்குடிக்கு பெருமை சேர்த்தார் ராமலிங்கபாரதி
இவருக்கு மகாராஷ்டிரா மாநிலம் அவுங்கரபாத்தில் நடைபெற்ற இந்திய டேக்வாண்டோ அணிக்கான தேர்வு போட்டி இந்தியா டேக்வாண்டோ சங்கம் நடத்தியது.
இத்தேர்வு போட்டியில் தமிழகத்தின் சார்பாக தூத்துக்குடியை சேர்ந்த ராமலிங்கபாரதி நடுவராக கலந்து கொண்டு சிறப்பாக பணியாற்றிய அவருக்கு இந்தியா டேக்வாண்டோ தலைவர் நாம்தேவ் மற்றும் நடுவர் சேர்மன் திருமால் ஆகியோர் ராமலிங்கபாரதி செயல்பாடுகளை பாராட்டினார்கள்.
இதனையடுத்து இந்தியா டேக்வாண்டோ நடுவர் ராமலிங்கபாரதிக்கு தூத்துக்குடி மாவட்ட அமெச்சூர் டேக்வாண்டோ சங்கம் சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்து பாராட்டினார்கள்.