தூத்துக்குடியில் முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி கேக் வெட்டி கொண்டாட்டபட்டது.
தமிழக முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் 69வது பிறந்தநாளை முன்னிட்டு வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் சமூகநலன் மற்றும் பெண்கள் உரிமைத்துறை அமைச்சருமான கீதாஜீவன் வழிகாட்டுதலின்படி மாநகர திமுக சார்பில் பழைய பேருந்துநிலையம் அருகில் பட்டாசு வெடித்து பிரம்மாண்டமான கேக் வெட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது.
மாநகர செயலாளர் ஆனந்தசேகரன் தலைமை வகித்து கேக் வெட்டி பொதுமக்களுக்கு வழங்கினார்.
நிகழ்ச்சியில், பொதுக்குழு உறுப்பினர்கள் கோட்டுராஜா, ராஜா, மாவட்ட அவைத்தலைவர் செல்வராஜ், மாவட்ட துணைச் செயலாளர் ஆறுமுகம், மாநகர துணைச்செயலாளர் கீதாமுருகேசன், மீனவரணி அமைப்பாளர் அந்தோணிஸ்டாலின், ஆதிதிராவிடர் நலஅணி அமைப்பாளர் பரமசிவம், வக்கீல் அணி அமைப்பாளர் மோகன்தாஸ் சாமுவேல், மகளிர் அணி அமைப்பாளர் கஸ்தூரிதங்கம், மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் மதியழகன், மாவட்ட அணி துணை அமைப்பாளர்கள் ராமர், பாலகுருசாமி, சேசையா, நலம் ராஜேந்திரன், அரசு வக்கீல் சுபேந்திரன், மாநகர தொண்டரணி அமைப்பாளர் முருகஇசக்கி, மருத்துவஅணி அமைப்பாளர் அருண்குமார், மகளிர் அணி அமைப்பாளர் ஜெபக்கனி, பகுதி செயலாளர்கள் சுரேஷ்குமார், ராமகிருஷ்ணன், ரவீந்திரன், நிர்மல்ராஜ், மாநகர இளைஞரணி அமைப்பாளர் ஆனந்தகபரியேல்ராஜ், மாநகர மாணவரணி துணை அமைப்பாளர் பால்மாரி, ஆதிதிராவிட நல அணி துணை அமைப்பாளர் பால்ராஜ், மாநகர மீனவரணி துணைச்செயலாளர் ஆர்தர்மச்சாது, பகுதி துணைச்செயலாளர் பாலு, பகுதி இளைஞர் அணி அமைப்பாளர்கள் சூர்யா, ரவி, மாவட்ட பிரதிநிதிகள் கதிரேசன், இசக்கிராஜா, கவுன்சிலர்கள் கலைச்செல்வி, பொன்னப்பன், கந்தசாமி, ரிக்டா, ஜான்சிராணி, ஜாக்குலின்ஜெயா, ராமர், கண்ணன், அன்னலட்சுமி, சரவணக்குமார், விஜயகுமார், ஜெனிட்டா, முத்துவேல், கனகராஜ், வட்டச்செயலாளர்கள் சாரதி, சதீஷ்குமார், டென்சிங், தொழிற்சங்க நிர்வாகிகள் மரியதாஸ், முருகன், வட்டப்பிரதிநிதி சுப்பையா, மகேஸ்வரசிங், முன்னாள் கவுன்சிலர்கள் செல்வகுமார், ராஜாமணி, உள்பட பலர் கலந்து கொண்டனர்.
வடக்கு மாவட்ட திமுக சார்பில் முதியோர் இல்லங்கள், ஆதரவற்றோர் இல்லங்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது.
சண்முகபுரம் பகுதி திமுக சார்பில் தேரடி முன்பு பகுதி செயலாளர் சுரேஷ்குமார் தலைமையில் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கப்பட்டது. மாவட்ட பிரதிநிதி சக்திவேல், பகுதி இளைஞர் அணி அமைப்பாளர் சூர்யா, கீதாசெல்வமாரியப்பன், கலந்து கொண்டனர்.
செல்வநாயகபுரத்தில் மாவட்ட பிரதிநிதியும், முன்னாள் கவுன்சிலருமான ரவீந்திரன் தலைமையில் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கப்பட்டது.
மாவட்டம் நீதிமன்றம் அருகில் தொண்டரணி அமைப்பாளர் முருகஇசக்கி தலைமையில் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கினார்கள். மாநகர சிறுபான்மை பிரிவு செயலாளர் செய்யதுகாசிம், மாநகர இளைஞர் அணி துணைச்செயலாளர் சங்கரநாராயணன், வட்டச்செயலாளர் சண்முகராஜ், வட்டப்பிரதிநிதி கண்ணன், பரமசிவம், உள்பட பலர் கலந்து கொண்டனர்.
தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளரும், மீன்வளம் மற்றும் கால்நடைத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், வழிகாட்டுதலின்படி மாப்பிள்ளையூரணி ஊராட்சி மன்ற தலைவர் சரவணக்குமார் தலைமையில் ஊராட்சி மன்றம் முழுவதும் கொடியேற்றி இனிப்புகள் வழங்கி பவுல் அலங்காரம் பார்வையற்றோர் இல்லத்திற்கு உணவு வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில், வட்ட இளைஞர் அணி துணைசெயலாளர் அம்பாசங்கர், ஓன்றிய துணைச்செயலாளரும் ஓன்றிய கவுன்சிலருமான அந்தோணிதனுஷ்பாலன், ஒன்றிய துணைச்செயலாளர் மைக்கேல்ராஜ், மாணவரணி துணைச்செயலாளர்கள் பாலமுருகன், மாரிச்செல்வம், வர்த்தக அணி துணைச்செயலாளர் பிளோமின்ராஜ், ஊராட்சி மன்ற துணைத்தலைவி தமிழ்செல்வி, மாப்பிள்ளையூரணி ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் பாரதிராஜா, மகேஸ்வரி காமராஜ், பெலிக்ஸ், வசந்தகுமாரி, மாவட்ட பிரதிநிதிகள் சப்பாணிமுத்து, நெல்சன், கிளைச்செயலாளர்கள் தனபால், தங்கபாண்டி, சரவணன், இம்மானுவேல், செய்யது முகம்மது, உலகநாதன், கருப்பசாமி, ஆனந்தம், பாலுநரேன், கலந்து கொண்டனர்.