தூத்துக்குடி 32வது வார்டு திமுக கவுன்சிலர் கந்தசாமி வாக்காளர்களுக்கு வீடு வீடாக நன்றி தெரிவித்தார்.
நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் 32வது வார்டு கவுன்சிலர் பதவிக்கு திமுக கூட்டணி சார்பில் திமுக வேட்பாளராக போட்டியிட்ட வட்டச்செயலாளர் கந்தசாமி வெற்றி பெற்றார்.
இதனையடுத்து கனிமொழி எம்.பி வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளரும் சமூகநலன் மற்றும் பெண்கள் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் பொதுக்குழு உறுப்பினர் ஜெகன்பெரியசாமி, ஆகியோரை சந்தித்து வாழ்த்துபெற்ற பின் பகுதிக்குட்பட்ட அண்ணாநகர், டிஎம்பி காலணி, உள்ளிட்ட பகுதிகளில் நடந்தே சென்று வீதிவீதியாக ஒவ்வொரு வீட்டிலுள்ள வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தார்.
மாநகர மாணவரணி துணை அமைப்பாளர் பால்மாரி, அண்ணாநகர் பகுதி இளைஞர் அணி துணை அமைப்பாளர் ராமசந்திரன், வார்டு நிர்வாகிகள் தாமஸ், ஜெயராஜ், மோகன், இளங்கோ, தளவாய்சாமி, சண்முகவேல், எட்வர்ட் ராஜா, ஜோதிராஜ், மாரிமுத்து, கந்தசாமி, பாலசுப்பிரமணியன், ஜோன்சன், சிவகாமிசெல்வன், உள்பட பலர் உடனிருந்தனர்.