• vilasalnews@gmail.com

தூத்துக்குடியில் தமிழ்நாடு காட்டுநாயக்கன் பழங்குடியினர் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது

  • Share on

தூத்துக்குடியில் தமிழ்நாடு காட்டுநாயக்கன் பழங்குடியினர் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

தமிழ்நாடு காட்டுநாயக்கன் பழங்குடியினர் ஜனநாயக சீர்திருத்த சங்க கூட்டம் தூத்துக்குடி பிரையண்ட்நகரில் வைத்து நடைபெற்றது.

மாவட்ட கிளைக்கழக சங்க துவக்க விழாவிற்கு உஜ்ஜுலி தலைமை தாங்கினார். மாநில பொதுச்செயலாளர் பன்னீர்செல்வம் முன்னிலை வகித்தார். முருகேசன் வரவேற்புரையாற்றினார்.

கூட்டத்தில், எஸ்டி சாதிச்சான்று நிலுவையின்றி வழங்கவும், 7.5 சதவீத இடஓதுக்கீடு வழங்கிடவும் தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்தனர்.

பழங்குடியினருக்கென ஐஏஎஸ் கொண்ட தனி அரசு செயலாளர் தலைமையில் புதிய துறை உருவாக்க வேண்டும். தூத்துக்குடி அண்ணாநகர் 9வது தெருவில் உள்ள பழங்குடி காட்டுநாயக்கன் மக்களுக்கான பத்திரகாளியம்மன் கோவிலை பாரமரிப்பு செய்து தர வேண்டும். பழங்குடி காட்டுநாயக்கன் சமூக மக்களின் முன்னோடி சமூக போராளி மாரியப்பன் உருவசிலை திறக்கப்பட்டு தூத்துக்குடி கிளை மாவட்ட சங்க நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டு புதிய ஜனநாயக சங்க அமைப்பு உருவாக்கப்பட்டது. உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இக்கூட்டத்தில், மாநில மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

இசக்கி நன்றியுரையாற்றினார்.

  • Share on

தூத்துக்குடியில் பாட்டாளி மக்கள் கட்சியின் மத்திய மாவட்ட செயற்குழு கூட்டம் நடைபெற்றது

தூத்துக்குடி 32வது வார்டு திமுக கவுன்சிலர் கந்தசாமி வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தார்.

  • Share on