தூத்துக்குடியில் பாட்டாளி மக்கள் கட்சியின் மத்திய மாவட்ட செயற்குழு கூட்டம் நடைபெற்றது
பாட்டாளி மக்கள் கட்சியின் மத்திய மாவட்ட செயற்குழு கூட்டம் தூத்துக்குடி மாவட்ட செயலாளர் சின்னத்துரை தலைமையில் நடைபெற்றது.
பின்னர், தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் ஜனநாயக முறைப்படி நடைபெறாமல் பணநாயக முறைப்படி நடந்துள்ளது.
கண்துடைப்புக்கு தேர்தல் நடத்தி அராஜகம் முறையில் இயந்திர வாக்கு பதிவுகளை தன்வசப்படுத்தி திமுக முறைகேடு செய்து வெற்றி பெற்றுள்ளது.
இனி வரும் காலங்களில் இதுபோன்ற இயந்திர வாக்குப்பதிவு இயந்திரங்கள் மூலம் வாக்குப்பதிவு நடத்தாமல் மருத்துவர் ராமதாஸ் அய்யா ஏற்கனவே கூறி வருவது போல் பழைய முறையான வாக்குச்சீட்டு முறையை அறிமுகப்படுத்த வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இக்கூட்டத்தில் மாநகர செயலாளராக கணேசனுக்கு பொறுப்பு வழங்கப்பட்டது
இக்கூட்டத்தில், மாவட்ட தலைவர் ஜார்ஜ், மாவட்ட அமைப்பு செயலாளர் சக்தி, மாவட்ட துணைச் செயலாளர் தொம்மை ராஜ், மாவட்ட துணை தலைவர் ரமேஷ்குமார், மாவட்ட துணை அமைப்பு செயலாளர் தொம்மை குருஸ் மாவட்ட துணை செயலாளர் கந்தசாமி, கருங்குளம் ஒன்றிய செயலாளர் கிட்டு, மாநகர தலைவர் பாலமுருகன், மாவட்ட இளைஞரணி தலைவர் ராஜா, மாவட்ட இளைஞரணி செயலாளர் பிரபு, பசுமைத்தாயகம் அமைப்பாளர் மாரி, மாநகர துணை செயலாளர் குமார், மா நகர பொருளாளர் மாரியம்மாள், மற்றும் வேட்பாளர்களாக போட்டியிட்ட சந்தானலட்சுமி, சங்கரி, கார்த்திகா, செல்வலதா, உமையாதேவி, உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்
இறுதியாக மாவட்ட பொருளாளர் காளியம்மாள் நன்றி கூறினார்.