தூத்துக்குடியில் போலியோ சொட்டுமருந்து முகாம் அமைச்சர் கீதாஜீவன் குழந்தைகளுக்கு வழங்கினார்.
தமிழக அரசின் மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்பநலத்துறை சார்பில் தூத்துக்குடி மாவட்டத்தில் 1222 மையங்களில் 5379 பணியாளர்கள் மூலம் 13,4199 குழந்தைகளுக்கு சிறப்பு போலியோ சொட்டுமருந்து வழங்கும் முகாம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு, மாவட்ட ஆட்சி தலைவர் செந்தில்ராஜ் தலைமையில் சமூகநலன் மற்றம் பெண்கள் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்கி துவக்கி வைத்தார்.
நிகழ்ச்சியில், மருத்துவ கல்லூரி டீன் நேரு, மாநகராட்சி ஆணையர் சாருஸ்ரீ, திமுக பொதுக்குழு உறுப்பினர் ஜெகன் பெரியசாமி, மாநகர செயலாளர் ஆனந்தசேகரன், உறைவிட மருத்துவர் சைலஸ் ஜெபமணி, மாநகராட்சி நகர் நல அலுவலர் டாக்டர் வித்யா, மாவட்ட விவசாய அணி துணைச்செயலாளர் தங்கராஜ், போல்பேட்டை பகுதி பிரதிநிதி பிரபாகர், போல்பேட்டை பகுதி இளைஞர் அணி துணை செயலாளர் அல்பட், 13வது வார்டு கவுன்சிலர் ஜாக்குலின் ஜெயா, முன்னாள் கவுன்சிலர்கள் செந்தில்குமார், செல்வகுமார், மாநகராட்சி அதிகாரிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
தூத்துக்குடி, மாப்பிள்ளையூரணி ஊராட்சி மன்ற அலுவலகத்தில் ஊராட்சி மன்ற தலைவர் சரவணக்குமார் குழந்தைகளுக்கு சொட்டுமருந்து வழங்கினார். உடன், சுகாதார ஆய்வாளர் வில்சன், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் மகேஸ்வரி காமராஜ், பாரதிராஜா, மற்றும் சிவக்குமார், தனபாலன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
30வது வார்டு கவுன்சிலர் அதிர்ஷ்டமணி ரவீந்திரன் மற்றும் திமுக வட்டசெயலாளரும், 12வது வார்டு கவுன்சிலருமான தெய்வேந்திரன், தூத்துக்குடி ஒன்றிய திமுக துணைச்செயலாளரும் ஒன்றிய கவுன்சிலருமான அந்தோணிதனுஷ்பாலன் ஆகியோர் அவர்களது பகுதியில்சொட்டு மருந்து வழங்கினார்கள்.