தூத்துக்குடி ஜெகன் பெரியசாமிக்கு ஐஜேகே தென்மண்டல இணைச்செயலாளர் அருணாதேவி வாழ்த்து தெரிவித்தார்.
தூத்துக்குடி மாநகராட்சியில் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்கள் 50 இடங்களில் வெற்றி பெற்றனர்.
சுயேட்சையாக வெற்றி பெற்றவர்களில் 3 பேர் கனிமொழி எம்.பி வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளரும், சமூகநலன் மற்றும் பெண்கள்உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் ஆகியோர் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர்.
எனவே, மாநகராட்சி திமுக கூட்டணி பலம் 53ஆக உயர்ந்தது. இதில் 20வது வார்டில் வெற்றி பெற்ற திமுக பொதுக்குழு உறுப்பினர் ஜெகன் பெரியசாமிக்கு பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
மார்ச் 4ம் தேதி மேயராக பொறுப்பேற்க உள்ள நிலையில் அவரது அலுவலகத்தில் இந்திய ஜனநாயக கட்சி தென்மாநில இணைச்செயலாளர் அருணாதேவி ரமேஷ்பாண்டியன் பூங்கொத்து கொடுத்து நிர்வாகிகளுடன் வாழ்த்து தெரிவித்தார்.
உடன், திமுக மாவட்ட பொருளாளர் சுசி.ரவீந்திரன், தலைமை பேச்சாளர்கள் இருதயராஜ், சரத்பாலா, தமிழன்பண், மாவட்ட தொண்டரணி துணைச்செயலாளர் ராமர், போல்பேட்டை பகுதி பிரதிநிதிகள் லிங்கராஜா, பிரபாகர், முன்னாள் ஒன்றிய இளைஞர் அணி செயலாளர் இம்மானுவேல், மற்றும் குமார், மணி, உள்பட பலர் உடனிருந்தனர்.