• vilasalnews@gmail.com

தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஓகே .... துணை மேயர் யாருக்கு?

  • Share on

தூத்துக்குடி மாநகராட்சியில் மொத்தம் உள்ள 60 வார்டுகளுக்கான தேர்தல் கடந்த 19ம் தேதி நடைபெற்றது.

மொத்தமுள்ள 60 வார்டுகளில் திமுக 43 வார்டுகளிலும், அதன் கூட்டணி கட்சியான காங்கிரஸ் 3 வார்டுகளிலும், மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், மதிமுக, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகியவை தலா ஒரு வார்டுகளிலும் வெற்றி பெற்றன. 60 வார்டுகளிலும் போட்டியிட்ட அதிமுக 6 வார்டுகளில் மட்டுமே வெற்றி பெற்றது. சுயேச்சை வேட்பாளர்கள் 4 வார்டுகளில் வெற்றி பெற்றனர். 

இதனையடுத்து, தூத்துக்குடி மாநகராட்சி தேர்தலில் பெரும்பான்மையான இடங்களில் திமுக அபார வெற்றி பெற்று தூத்துக்குடி மாநகராட்சியின் மேயர் பதவியை கைப்பற்றிய நிலையில், தூத்துக்குடி மாநகராட்சியின் மேயர் வடக்கு மாவட்ட தி.மு.க பொறுப்பாளரும், தூத்துக்குடி தொகுதியின் எம்.எல்.ஏவும், மகளிர் நலன் மற்றும் சமூகநலத்துறை அமைச்சரான கீதாஜீவனின் தம்பி ஜெகன்தான் என உறுதியாகிவிட்ட நிலையில் தற்போது துணை மேயர் பதவி யாருக்கு என்பது எதிர்பார்ப்பாக உள்ளது.

தூத்துக்குடி மாநகராட்சியில் இந்து நாடார், கிறிஸ்தவ நாடார் சமுதாயத்தினருக்கு அடுத்தபடியாக மீனவ சமுதாய மக்கள் கணிசமான எண்ணிக்கையில் உள்ளனர். இதுவரை துணை மேயர் பதவி மீனவ சமுதயாத்தைச் சேர்ந்த உறுப்பினருக்கே ஒதுக்கப்பட்டு வந்தது. இந்த முறையும் மீனவ சமுதாயத்தைச் சேர்ந்த உறுப்பினருக்குதான் துணை மேயர் பதவி என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. ஆனால், அந்தப்பதவி ஆண் உறுப்பினருக்கா, பெண் உறுப்பினருக்கா என்ற கேள்வி எழுந்துள்ளது. மாநகராட்சியில் மொத்தமுள்ள 60 வார்டுகளில் 30 வார்டுகள் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

அதனால், துணை மேயர் பதவியை பெண்ணுக்கு ஒதுக்க வேண்டும் என்ற குரலும் தூத்துக்குடி தி.மு.க மகளிரணியில் ஓங்கி ஒலிக்கிறது.  அந்த வகையில், 40வது வார்டில் போட்டியிட்டு வெற்றி பெற்ற ஜெனிட்டா துணை மேயர் பதவிக்கு தேர்வு செய்யப்படலாம் என்கிறார்கள். இவர், வடக்கு மாவட்ட தி.மு.க அவைத்தலைவர் செல்வராஜின் மனைவி.

செல்வராஜ், முன்னாள் மண்டலத் தலைவராகவும் இருந்துள்ளார். அதே நேரத்தில், ஜெகனின் ஆதரவாளரான 7வது வார்டில் வெற்றி பெற்ற திரேஸ்புரம் பகுதிச் செயலாளரான நிர்மல்ராஜூம் துணைமேயர் ரேஸில் உள்ளார். இவரது தந்தை தொம்மை ஏசுவடியான், ஏற்கெனவே துணை மேயராக பதவியில் இருந்தவர். துணை மேயர் பதவி பெண்ணுக்கு ஒதுக்கிட முடிவு செய்யப்பட்டால், ஜெனிட்டாவுக்குதான் அதிக வாய்ப்பு என்கிறார்கள் உள்ளூர் உடன்பிறப்புகள். துனை மேயர் பதவியைப் போலவே மண்டலத் தலைவர் பதவியைப் பிடிக்கவும் கடும் போட்டி நிலவுகிறது.

  • Share on

தூத்துக்குடியில் தையல்கடைக்காரர் கொலை - 2 பேர் கைது - கைது செய்த தனிப்படை போலீசாருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் பாராட்டு!

தூத்துக்குடி மேயராக பொறுப்பேற்கவுள்ள ஜெகன் பெரியசாமிக்கு ஐஜேகே தென்மண்டல இணைச்செயலாளர் அருணாதேவி வாழ்த்து!

  • Share on