• vilasalnews@gmail.com

விளாத்திகுளத்தில் ஜெயலலிதா பிறந்த நாள் விழா : அதிமுகவினர் மரியாதை!

  • Share on

விளாத்திகுளத்தில் அதிமுக சார்பில் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் 74 வது பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.

விளாத்திகுளம் பேருந்து நிலையம் முன்பு மறைந்த  ஜெயலலிதாவின் 74 வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. விழாவையொட்டி அலங்கரிக்கப்பட்ட ஜெயலலிதா உருவப்படத்துக்கு அதிமுகவினர் மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செய்தனர்.

அதனையடுத்து, பேருந்து நிலையம் முன்பு மற்றும் காய்கறி மார்க்கெட் பகுதியில் உள்ள எம்ஜிஆரின் திருஉருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை தெலுத்தினர். அதனைத்தொடர்ந்து, பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது. 

இந்நிகழ்வில், விளாத்திகுளம் தொகுதி முன்னாள் எம்எல்ஏக்கள் என்.கே.பெருமாள், சின்னப்பன், விளாத்திகுளம் பேரூராட்சி தேர்தல் பொறுப்பாளரும், ஓட்டப்பிடாரம் கிழக்கு ஒன்றிய செயலாளரும், முன்னாள் ஓட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றிய தலைவருமான காந்தி காமாட்சி, 

விளாத்திகுளம் ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் முனியசக்தி இராமச்சந்திரன், முன்னாள் சேர்மன் என்.கே.பி.வரதராஜபெருமாள், விளாத்திகுளம்  ஒன்றிய செயலாளர்கள் நடராஜன், பால்ராஜ், நகர செயலாளர் மாரிமுத்து அவர்கள் மற்றும் அதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

  • Share on

தூத்துக்குடி மாவட்ட எஸ்பியாக பாலாஜி சரவணன் நியமனம்!

கழுகுமலை : வாட்ஸ் அப்பில் பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு மேசேஜ் - ஒருவர் கைது!

  • Share on