• vilasalnews@gmail.com

தூத்துக்குடி மாவட்ட எஸ்பியாக பாலாஜி சரவணன் நியமனம்!

  • Share on

தூத்துக்குடி மாவட்டத்தின் புதிய காவல்துறை கண்காணிப்பாளராக  பாலாஜி சரவணன் நியமிக்கப்பட்டுள்ளார். 

தூத்துக்குடி மாவட்ட எஸ்பி ஜெயக்குமார் பணியிட மாற்றம் செய்யப்பட்டு, சிபிசிஐடி சிறப்பு பிரிவு எஸ்பியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். மேலும் சென்னை காவல்துறை இணை ஆணையராக பொறுப்பு வகித்து வந்த பாலாஜி சரவணன் தூத்துக்குடி மாவட்டத்தின் புதிய எஸ்பியாக நியமிக்கப்பட்டுள்ளார். 

அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர் ராமஜெயம் கொலை வழக்கு தொடர்பாக விசாரணை நடத்த தூத்துக்குடி மாவட்ட எஸ்பி ஜெயக்குமார் தலைமையிலான சிறப்பு விசாரணைக் குழு அமைத்து உயர் நீதிமன்றம் சமீபத்தில் உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில், தூத்துக்குடி மாவட்ட எஸ்பி ஜெயக்குமார் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

  • Share on

தூத்துக்குடியில் ஜெயலலிதா பிறந்தாளை முன்னிட்டு அவரது படத்திற்கு அதிமுக முன்னாள் அமைச்சர் சி.த செல்லப்பாண்டியன் மாலை அணிவிப்பு!

விளாத்திகுளத்தில் ஜெயலலிதா பிறந்த நாள் விழா : அதிமுகவினர் மரியாதை!

  • Share on