தூத்துக்குடியில் ஜெயலலிதா பிறந்தாளையொட்டி அவரது படத்திற்கு அதிமுக முன்னாள் அமைச்சர் சி.த செல்லப்பாண்டியன் மாலை அணிவித்தனர்.
அதிமுக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா 74வது பிறந்த நாளையொட்டி முன்னாள் அமைச்சரும், அமைப்பு செயலாளருமான சி.த.செல்லப்பாண்டியன் தலைமையில் சிதம்பரநகர் அமைப்பு கழகம் அலுவலகம் முன்பு அலங்கரிக்கப்பட்ட ஜெயலலிதா படத்திற்கு மாலை அணிவித்து இனிப்பு வழங்கினார்.
நிகழ்ச்சியில், பகுதி செயலாளர்கள் சேவியர், முருகன், ஒன்றிய செயலாளர் செங்கான், முன்னாள் நகர்மன்ற துணைத் தலைவர் ரத்தினம், தலைமை பேச்சாளர் கருணநிதி, முன்னாள் அரசு வழக்கறிஞர்கள் ஆண்ட்ரூமணி, பிள்ளைவிநாயகம், முன்னாள் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் ராஜகோபால், ஜெ பேரவை துணை செயலாளர் ஜீவாபாண்டியன், மாவட்ட மகளிர் அணி இணைச்செயலாளர் ஞானபுஷ்பம், மேலூர் கூட்டுறவு வங்கி துணைத் தலைவர் சிவசுப்பிரமணியன், இயக்குனர்கள் அன்புலிங்கம், பாலசுப்ரமணியன், திருமணி, சங்கரி, வட்டசெயலாளர்கள் ஜெயக்குமார், மாரியப்பன், பாம்பு முருகன், ராஜா, அருண்குமார், டைமன்ராஜ், துரைசிங், நிர்வாகிகள் கெய்னஸ், திருமணி, முருகேசன், கருப்பசாமி, அருள்ராஜ், அந்தோணிராஜ், பரமசிவன், முருகன், முன்னாள் கவுன்சிலர்கள் ஜெயக்குமார், டேவிட் ஏசுவடியான், சகாயராஜ், போக்குவரத்து பிரிவு டெரன்ஸ், சண்முகராஜ், ராஜேந்திரன், பேச்சியப்பன், மணிகண்டன், சண்முகராஜ், அனல்ராஜசேகர், சுப்புராஜ், ராஜ்குமார், ரமேஷ், இசக்கிமுத்து, அமல்ராஜ், ஜெயராஜ், ஆறுமுகம், மூர்த்தி, வீரகோன், அசரியான், சீனிவாசன், உள்பட பலர் கலந்து கொண்டனர். பின்னர் முன்னாள் அமைச்சரும் அமைப்பு செயலாளருமான சி.த.செல்லப்பாண்டியன் காலை உணவு பொதுமக்களுக்கு வழங்கினார்.