• vilasalnews@gmail.com

தூத்துக்குடி 3வது வார்டு பகுதியில் தேர்தல் பணியாற்றியவர்களுக்கு பாராட்டு!

  • Share on

தூத்துக்குடி 3வது வார்டு பகுதியில் தேர்தல் பணியாற்றியவர்களுக்கு வெற்றி பெற்ற ரெங்கசாமி நன்றி தெரிவித்தார்.

நடைபெற்ற உள்ளாட்சி மன்ற தேர்தலில் ஒட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மாநகராட்சி 3வது வார்டில் போட்டியிட்ட தெற்கு மாவட்ட வர்த்தக அணி துணைச்செயலாளர் ரெங்கசாமி வெற்றி பெற்றார்.

தூத்துக்குடி மாநகராட்சி 3வது வார்டு திமுக வேட்பாளராக போட்டியிட்ட ரெங்கசாமி, வார்டு பகுதியில் பொறுப்பாளர்களாக முன்னாள் எம்.எல்.ஏ டேவிட் செல்வின், தேர்தல் பொறுப்பாளர்கள் தெற்கு மாவட்ட ஆதிதிராவிட நல அணி மாவட்ட செயலாளர் டிடிசி ராஜேந்திரன், மாப்பிள்ளையூரணி பஞ்சாயத்து தலைவர் சரவணக்குமார், ஆகியோரை தெற்கு மாவட்ட திமுக சார்பில் நியமணம் செய்யப்பட்டிருந்தனர். 3வது வார்டுக்குட்பட்ட பகுதியில் இரவு பகல் பாராமல் கூட்டணி கட்சியினர் மற்றும் நிர்வாகிகளுடன் இணைந்து வெற்றிக்காக முழுமையாக அர்ப்பணித்துக் கொண்டு பணியாற்றினார்கள். கடந்த 22ம் தேதி தேர்தல் முடிவு அறிவிக்கப்பட்டதில் ரெங்கசாமி வெற்றி பெற்றார். இதனையடுத்து நன்றி தெரிவிக்கும் கூட்டம் நடைபெற்றது.

மாமன்ற உறுப்பினர் ரெங்கசாமி பேசுகையில், எனது வெற்றிக்காக உழைத்த தேர்தல் பொறுப்பாளர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இப்பகுதியின் வளர்ச்சிக்காக முழுமையாக தன்னை அர்ப்பணித்துக் கொண்டு பணியாற்றுவோம். மற்ற வார்டுகளுக்கு முன்மாதிரி வார்டாக இருப்பதற்கு உழைப்பேன் அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். என்று கேட்டுக் கொண்டார்.

கூட்டத்தில், மாப்பிள்ளையூரணி ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் பாரதிராஜா, தங்கமாரிமுத்து, தெற்கு மாவட்ட சுற்றுச்சூழல் அணி மாவட்ட செயலாளர் ரவி என்ற பொன்பாண்டி, ஒன்றிய துணைச்செயலாளர் மைக்கேல்ராஜ், தெற்கு மாவட்ட மாணவரணி துணைச்செயலாளர் ஜீவா பாலமுருகன், கிளைச்செயலாளர்கள் காமராஜ், தர்மலிங்கம், பொன்னுச்சாமி, ஜோதிடர் முருகன், மற்றும் ஜாகீர் உசேன், ஜான்ராஜ், ராஜசேகர், வெங்கடேஷன், மாயக்கண்ணன், பாலசுப்பிரமணியன், சங்கரசுப்பிரமணியன், அருணாதேவி, மீனா, பியூலா, செல்வக்குமார், பரமசிவன், ராஜகுமாரசாமி, செல்வராஜ், சேவியர், பால்ராஜ், கண்ணன், காளிமுத்து, ராஜாமணி, அதிசயராஜ், ராஜம், மகேந்திரன், சண்முகராஜ், பொன்ராஜ், சிவன், வெற்றி, துரைராஜ், தெய்வேந்திரன், சுரேஷ், ஷாஜகான், சிவகாமி, சுந்தரி, மரிய சேவியர், அபிராமி, செல்லையா, உள்பட பலர் கலந்து கொண்டனர்.

  • Share on

திமுக வசமானது கோவில்பட்டி நகராட்சி

தூத்துக்குடி மாநகராட்சியில் 18 அதிமுக வேட்பாளர்கள் டெபாசிட் இழப்பு!

  • Share on