நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் கோவில்பட்டி நகராட்சியை திமுக தனிப்பெரும்பான்மையுடன் கைப்பற்றியுள்ளது.
கோவில்பட்டி நகராட்சியில் கடந்த 19-ம் தேதி நடந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நேற்று கோவில்பட்டி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையத்தில் நடந்து முடிந்தது.
இதில், 36 வார்டுகள் கொண்ட கோவில்பட்டி நகராட்சியில், 19 இடங்களில் திமுகவும், 5 இடங்களில் மா.,கம்யூனிஸ்ட்டும், 2 இடங்களில் மதிமுகவும், 4 இடங்களில் அதிமுகவும், இந்திய கம்யூனிஸ்ட், அமமுக, பாஜக தலா 1 இடங்களும், சுயேட்சைகள் 3 இடத்திலும் வெற்றி பெற்றுள்ளன.
இதில், திமுக 19 இடங்களிலும், அதன் கூட்டணி கட்சிகளோடு சேர்த்து மொத்தம் 27இடங்களிலும் வென்று அமோக வெற்றி பெற்று கோவில்பட்டி நகராட்சியை திமுக வசமாக்கியது.