• vilasalnews@gmail.com

தூத்துக்குடியில் திமுக சார்பில் தலைவர்கள் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை!

  • Share on

தூத்துக்குடியில் அனைத்து தலைவர்கள் சிலைக்கும் கனிமொழி எம்.பி, அமைச்சர் கீதாஜீவன், ஜெகன்பெரியசாமி மாலை அணிவித்தனர்.

நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் தூத்துக்குடி மாநகராட்சியில் 50 இடங்களில் திமுக கூட்டணி வேட்பாளர்கள் வெற்றி பெற்றனர். இதனை தொடர்ந்து வடக்கு மாவட்ட திமுக அலுவலகமான எட்டையாபுரம் சாலையில் உள்ள கலைஞர் அரங்கில் கலைஞர் படத்திற்கு தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி, சமூக நலத்துறை அமைச்சர் கீதாஜீவன் ஆகியோர் மலர் அஞ்சலி செலுத்தினர். பின்னர், தேர்ந்தெடுக்கப்பட்ட திமுக உறுப்பினர்கள் அனைவருக்கும் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.

செய்தியாளர்களிடம் கூறுகையில், திமுக ஆட்சிக்கு மக்கள் வலுசேர்க்கும் வகையில் உள்ளாட்சி தேர்தலில் வெற்றியை வழங்கியுள்ளனர். முதலமைச்சர் ஸ்டாலின் ஆட்சியில் உள்ளாட்சி துறை சிறப்பாக செயல்படும் என்றார்.

பின்னர், காய்கனி மார்க்கெட் அருகிலுள்ள அண்ணா மற்றும் பெரியார், அம்பேத்கர், முத்துராமலிங்கம், குருஸ்பர்னாந்து, காந்தி, காமராஜர், வஉசி, உள்ளிட்ட சிலைகளுக்கு மாலை அணிவித்து கனிமொழி எம்.பி, அமைச்சர் கீதாஜீவன், பொதுக்குழு உறுப்பினர் ஜெகன் பெரியசாமி, ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.

உடன், மாவட்ட அவைத்தலைவர் செல்வராஜ், துணைச்செயலாளர் ஆறுமுகம், மாநகர செயலாளர் ஆனந்தசேகரன், துணைச்செயலாளர்கள் கனகராஜ், கீதாமுருகேசன், அரசு வக்கீல்கள் சுபேந்திரன், மாலாதேவி, இளைஞர் அணி செயலாளர் மதியழகன், பொறியாளர் அணி செயலாளர் அன்பழகன், மகளிர் அணி செயலாளர் கஸ்தூரி தங்கம், விவசாய அணி செயலாளர் சித்திரைசெல்வன், தொண்டரணி செயலாளர் ரமேஷ், மகளிர் தொண்டரணி செயலாளர் உமா, மீனவரணி செயலாளர் அந்தோணிஸ்டாலின், துணைசெயலாளர் சேசையா, பகுதி செயலாளர்கள் சுரேஷ்குமார், மேகநாதன், ஜெயக்குமார், ராமகிருஷ்ணன், நிர்மல்ராஜ், ரவிந்திரன், மாநகர தொண்டரணி செயலாளர் முருகஇசக்கி, மாவட்ட மாணவரணி துணைச்செயலாளர்கள் வக்கீல் பாலகுருசாமி, சங்கர், முத்துதுரை, மாவட்ட தொண்டரணி துணைச்செயலாளர்கள் ராமர், வழக்கறிஞர் அணி துணைச்செயலாளர் நாகராஜன்பாபு, சரவணன், மாநகர மீனவரணி துணைச்செயலாளர் ஆர்தர்மச்சாது, மாவட்ட பிரதிநிதிகள் இசக்கிராஜா, கதிரேசன், ராஜ்குமார், சக்திவேல், போல்பேட்டை பகுதி பிரதிநிதிகள் லிங்கராஜா, பிரபாகர், மாநகர மாணவரணி துணைச்செயலாளர் பால்மாரி, பொறியாளர் அணி துணைச்செயலாளர் உலகநாதன், மாநகர இளைஞர் அணி துணைச்செயலாளர்கள் செல்வின், சங்கரநாராயணன், அருண்சுந்தர், பொதுக்குழு உறுப்பினர்கள் கோட்டுராஜா, ராஜா, வட்டச்செயலாளர்கள் நாராயணன், தெய்வேந்திரன், ரவீந்திரன், கண்ணன், கந்தசாமி, ஏசுவடியான், பொன்ராஜ், வக்கீல் சதீஷ்குமார், முன்னாள் கவுன்சிலர்கள் ஜான்சிராணி, கலைச்செல்வி திலகராஜ், செந்தில்குமார், கருணா, மணி, அல்பட், மற்றும் மதிமுக மாநகர செயலாளர் முருகபூபதி, மாணவரணி துணைசெயலாளர் சரவணபெருமாள், இலக்கிய அணி மகாராஜன், அனல்செல்வராஜ், விநாயகமூர்த்தி, உள்பட புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட மாமன்ற உறுப்பினர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

  • Share on

தூத்துக்குடி மாநகராட்சி தேர்தலில் 9 வது வார்டு வேட்பாளர்கள் பெற்ற வாக்கு விபரம்!!

தூத்துக்குடி மாநகராட்சி தேர்தலில் 10 வது வார்டு வேட்பாளர்கள் பெற்ற வாக்கு விபரம்!!

  • Share on