• vilasalnews@gmail.com

தூத்துக்குடி மாநகராட்சி தேர்தலில் தெறிக்க விட்ட திமுக கூட்டணி - ஆரவாரத்தில் கழக உடன்பிறப்புகள்!

  • Share on

தூத்துக்குடி மாநகராட்சியில் 50 வார்டுகளில் வென்று  திமுக  கூட்டணி மாபெரும் வெற்றியை பெற்றுள்ளது

தூத்துக்குடி மாநகராட்சியில் காலியாக உள்ள 60 வார்டுகளுக்கான தேர்தல் கடந்த 19 ஆம் தேதி நடைபெற்றது. தேர்தலில் 59.11 சதவீத வாக்குகள் பதிவாகின. பதிவான வாக்குகள் அனைத்தும் தூத்துக்குடி வஉசி அரசு பொறியியல் கல்லூரியில் வைத்து இன்று செவ்வாய்க்கிழமை எண்ணப்பட்டன.

காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கிய நிலையில், முதலில் அஞ்சல் வாக்குகள் எண்ணப்பபட்டன. பின்னர், 15 மேஜைகளில் 1 முதல் 15 வார்டுகளில் பதிவான வாக்குகள் முதல் தளத்தில் வைத்தும், 31 முதல் 45 ஆவது வார்டுகளில் பதிவான வாக்குகள் இரண்டாவது தளத்தில் வைத்தும் எண்ணப்பட்டன. தொடர்ந்து, 16 முதல் 30 ஆவது வார்டுகளில் பதிவான வாக்குகளும், 46 முதல் 60 ஆவது வார்டுகளில் பதிவான வாக்குகளும் எண்ணப்பட்டன.

இதில், 44 வார்டுகளில் திமுகவும், 6 வார்டுகளில் அதிமுகவும், 3 வார்டுகளில் காங்கிரஸ் வேட்பாளர்களும்,4 வார்டுகளில் சுயேச்சை வேட்பாளர்களும் வெற்றி பெற்றனர். மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், மதிமுக, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி வேட்பாளர்கள் தலா ஒரு இடத்திலும் வெற்றி பெற்றனர். மாநகராட்சியில் உள்ள 60 வார்டுகளில் திமுக வேட்பாளர்கள் 44 இடங்களில் வெற்றி பெற்றுள்ள நிலையில் மாநகராட்சியை திமுக தன் வசம் ஆக்கியுள்ளது.

  • Share on

தூத்துக்குடி மாநகராட்சி தேர்தல் 2 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற அதிமுக வேட்பாளர்!

தூத்துக்குடி மாநகராட்சி : 1 வது வார்டு வேட்பாளர்கள் வாக்கு விபரம்!

  • Share on