தூத்துக்குடி மாநகராட்சி 51 வது வார்டு மாமன்ற உறுப்பினர் பதவிக்கு அதிமுக வேட்பாளர் மந்திரமூர்த்தி, திமுக வேட்பாளர் முத்துராஜா, அமமுக வேட்பாளர் பேச்சிமுத்து உள்ளிட்ட 10 பேர் போட்டியிட்டனர்.
இந்த நிலையில், கடந்த 19ம் தேதி நடைபெற்ற தேர்தல் வாக்கு பதிவின் போது, தபால் வாக்குகள் 9 உட்பட மொத்தம் 2617 வாக்குகள் பதிவாகின. இதற்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை தொடங்கி நடந்தது. பிற்பகலில் முடிவு அறிவிக்கப்பட்டது.
இதில் அதிமுக வேட்பாளர் மந்திரமூர்த்தி 779 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இரண்டாவதாக திமுக வேட்பாளரான முத்து ராஜ் 777 வாக்குகள் பெற்று இரண்டாம் இடமும், அமமுக வேட்பாளர் பேச்சிமுத்து 623 வாக்குகள் பெற்று மூன்றாம் இடத்தையும் பிடித்தார்.
இதனையடுத்து, அதிமுக வேட்பாளர் மந்திரமூர்த்தி 2 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார்.