தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஒரு மாநகராட்சி, 3 நகராட்சி, 17 பேரூராட்சிகளுக்கான வாக்குப்பதிவு கடந்த 19-ந் தேதி நடந்தது.
இதில் தூத்துக்குடி மாநகராட்சியில் 1 லட்சத்து 92 ஆயிரத்து 284 வாக்குகள் பதிவாகின. தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் ஓட்டுகள் பதிவான வாக்குப்பதிவு எந்திரங்கள் அனைத்தும் தூத்துக்குடி வ.உ.சி. அரசு பொறியியல் கல்லூரியில் அமைக்கப்பட்டு உள்ள வாக்கு எண்ணிக்கை மையத்துக்கு பாதுகாப்பாக கொண்டு வரப்பட்டன.
இதனைத் தொடர்ந்து, தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணிக்கை இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 8 மணிக்கு தொடங்கியது. இதில் முதலில் தபால் வாக்குகள் வார்டு வாரியாக பிரிக்கப்பட்டு வருகிறது. அதனைத்தொடர்ந்து தபால் ஓட்டுகள் எண்ணும் பணி தொடங்கும். இதைத்தொடர்ந்து வாக்குப்பதிவு எந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்படும்.